7th New Book டெல்லி சுல்தானியம் (100 QUESTIONS)
1. கி.பி. 12 நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது - முகமது கோரி.
2. அடிமை வம்சம் ஆட்சி காலம் - 1206 - 1290.
3. கில்ஜி அரச வம்சம் ஆட்சி காலம் - 1290 -1320.
4. துக்ளக் ஆட்சி காலம் - 1320 -1414.
5. சையது அரச வம்சம் ஆட்சி காலம் - 1414 -1451.
6. லோடி அரச வம்சம் ஆட்சி காலம்- 1451 -1526.
7. அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் -குத்புதீன் ஐபக்.
8. கில்ஜி அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி.
9. துக்ளக் அரசவம்சம் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டியவர் - கியாசுதீன் துக்ளக்.
10. சையது அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் – கிசிர்கான்.
11. லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தவர் - பகலூல் லோடி.
12. குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் - குத்புதீன் ஐபக்.
13. குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் – இல்துமிஷ்.
14. ஒற்றர் துறையை நிறுவியவர் - கியாசுதீன் பால்பன்.
15. குத்புதீன் ஐபக் தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார்- லாகூர்.
16. டெல்லி -குவ்வத்-உல்-இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டியவர்-குத்புதீன் ஐபக்.
17. அடிமை வம்சத்தினர் துணைக்கண்டத்தை ஆட்சி செய்த ஆண்டு – 84 ஆண்டு.
18. அடிமை வம்சம் - மம்லுக் அழைக்கப்பட்டது.
19. மம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு பொருள்- அடிமை.
20. அடிமை வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள்:
1. குத்புதீன் ஐபக்,
2. சம்சுதீன் இல்துமிஷ்
3. கியாசுதீன் பால்பன்
21. அலாவுதீன் கில்ஜி படை தலைமைத் தளபதி - மாலிக் கபூர்.
22. குத்புதீன் ஐபக்கின் மகன் -ஆரம் ஷா.
23. இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் - ருக்குதீன் பிரோஷ்.
24. பால்பனின் மகன் - கைகுபாத் .
25. ஜலாலுதீனின் உடன் பிறந்தோரின் மகன் - அலாவுதீன் கில்ஜி.
26. கியாசுதீன் துக்ளக் மகன் – ஜானாகான்.
27. பிரோஷ் ஷா துக்ளக் மகன் – முகமதுகான்.
28. பகலூல் லோடி யின் மகன் - சிக்கந்தர் லோடி.
29. சிக்கந்தர் லோடி மகன் - இப்ராகிம் லோடி.
30. துக்ரில்கான் - வங்காள ஆளுநர்.
31. அலாவுதீன் - காராவின் ஆளுநர்.
32. பகலூல் லோடி - சிர்கந்தின் ஆளுநர்.
33. குத்புதீன் ஐபக் காலம் ஆட்சி-1206 - 1210.
34. இல்துமிஷ் ஆட்சி காலம் -1210 - 1236.
35. ரஸ்ஸியா வின் ஆட்சி காலம் -1236 - 1240.
36. கியாசுதீன் பால்பன் ஆட்சி காலம்-1266 - 1287.
37. ஜலாலுதீன் கில்ஜி ஆட்சி காலம்-1296 - 1316.
38. பிரோஷ் ஷா துக்ளக் ஆட்சி காலம் -1351 - 1388.
39. முகமது பின் துக்ளக் ஆட்சி காலம்-1325 - 1351.
40. தைமூரின் படையெடுப்பு -1398
41. சித்தூர் சூறையாடல்-1303
42. குத்புதீன் ஐபக்கின் படைத்தளபதி, மருமகன் – இல்துமிஷ்.
43. ஒற்றர் துறை யை நிறுவியவர் - கியாசுதீன் பால்பன்.
44. நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியவர் –இல்துமிஷ்.
45. நாற்பதின்மர் துருக்கியப் பிரபுக்கள் குழு வை ஒழித்தவர்-கியாசுதீன் பால்பன்.
46. நாற்பதுபேரைக் கொண்ட அக்குழு சகல்கானி அல்லது நாற்பதின்மர்.
47. வாராங்கல் அரசர்- பிரதா பருத்ரன்.
48. மொராக்கோ நாட்டுப் பயணி - இபன் பதூதா.
49. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை அடிக்கல் நாட்டியவர்- கியாசுதீன் துக்ளக்.
50. தலைநகரை டெல்லியிலிருந்து- தேவகிரி க்கு மாற்றியவர்- முகமது பின் துக்ளக்.
51. தேவகிரியின் பெயரை தெளலதாபாத் என மாற்றியவர் -முகமது பின் துக்ளக்.
52. டெல்லியிலிருந்து தெளலதாபாத் செல்ல எத்தனை நாட்கள் நடந்தே செல்ல வேண்டும் - 40 நாட்கள்.
53. குத்புதீன் ஐபக் இயற்கை எய்திய ஆண்டு -1210.
54. இல்துமிஷ் இயற்கை எய்திய ஆண்டு -1236 - ஏப்ரல்.
55. அலாவுதீன் கில்ஜி இயற்கை எய்திய ஆண்டு -1316.
56. முகமது பின் துக்ளக் இயற்கை எய்திய ஆண்டு -1351 மார்ச் 23.
57. பிரோஷ் ஷா துக்ளக் இயற்கை எய்திய ஆண்டு -1388.
58. சையது அரச வம்சத்தின் கடைசி சுல்தான் - அலாவுதீன் ஆலம் ஷா.
59. லோடி அரச வம்சத்தின் கடைசி சுல்தான்- இப்ராகிம் லோடி.
60. இப்ராகிம் லோடி யை பாபர் பானிபட் போர்க்களத்தில் தோற்கடித்த ஆண்டு – 1526.
61. லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தவர் – பாபர்.
62. ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலம்-இக்தா.
63. இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்-பன்டகன்.
64. பன்டகன் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில் அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர்.
65. போலோ விளையாட்டின்போது குதிரையிலிருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த இயற்கை எய்தியவர்-குத்புதீன் ஐபக்.
66. குத்புதீன் ஐபக்கின் மகன் -ஆரம் ஷா.
67. ஐபக்கின் படைத்தளபதியும் மருமகனுமான இல்துமிஷை சுல்தானாகத் தேர்வு செய்தவர்கள்- துருக்கியப் பிரபுக்கள்.
68. செங்கிஸ்கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலூதீன் என்பவர் யாரிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டார்- இல்துமிஷ்.
69. மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட உருவாக்கியவர் -இல்துமிஷ் .
70. நாற்பதுபேரைக் கொண்ட குழு - நாற்பதின்மர் (அ) சகல்கானி .
71. தனது படைகளில் பணியாற்றியோர்க்கு இக்தாக்களை (நிலங்கள்) வழங்கியவர் – இல்துமிஷ்.
72. நிலத்தைப் பெற்றவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்- இக்தாதார் (அ) முக்தி.
73. ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பத் தொடங்கியவர்- ரஸ்ஸியா.
74. தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும் இடையூறாய் இருப்போரையும் கண்டறிய ஒற்றர் துறையொன்றை நிறுவியவர் –பால்பன்.
75. மீவாட்டைச் சேர்ந்த மியோக்கள் இடம் கருணையில்லாமல் நடந்துகொண்டவர்-பால்பன்.
76. செங்கிஸ்கானின் பேரன், ஈரானின் மங்கோலிய வைஸ்ராய் - குலகுகான் .
77. குலகுகான் என்பாரிடமிருந்து மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள் உறுதிமொழியைப் பெற்றவர்-பால்பன்.
78. பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரான அமிர்குஸ்ருவை ஆதரித்தவர்- பால்பன்.
79. தேவகிரி யாதவ அரசர் ராமச்சந்திரனைத் தோற்கடித்த பின்னர் அந்நகரைக் கொள்ளையடித்துப் பெருஞ்செல்வத்தோடு திரும்பியவர் - அலாவுதீன் கில்ஜி.
80. அலாவுதீனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள்: -
தக்காண அரசுகளான தேவகிரி – யாதவர்கள் ,
மதுரை - பாண்டியர்கள் ,
துவாரசமுத்திரத்தின் - ஹொய்சாளர்கள் ,
வாராங்கல் - காகதியர்கள்.
81. வேளாண் நிலங்களை அளவாய்வு செய்து நிரந்தர வரியை விதித்தவர்-அலாவுதீன் கில்ஜி.
82. நிலவரியைத் தானியமாக வசூல் செய்யும் முறையைப் பின்பற்றியவர்-அலாவுதீன் கில்ஜி.
83. நிலவரியை உயர்த்தியதோடு நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தவர்- முகமது-பின்-துக்ளக்.
84. செப்பு நாணயங்களை அடையாளப் பணமாக வெளியிட்டவர்- முகமது-பின்-துக்ளக்.
85. முகமது, எந்த பகுதியில் நிலவரியை உயர்த்தியதன் விளைவாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன- தோஆப் பகுதி.
86. முகமது பின் துக்ளக் சுல்தானாக ஆட்சிபுரிந்த ஆண்டு- 25 ஆண்டு.
87. துக்ளக்கிடம் படைவீரராகப் பணியாற்றிய - பாமினி தெளலதாபாத்தையும் அதைச் சுற்றிக் கைப்பற்றப்பட்ட பகுதிகளையும் சுதந்திர அரசாக அறிவித்தார்.
88. மதுரை தனி சுல்தானியமாக உருவானஆண்டு- கி.பி.1334.
89. வங்காளம் சுதந்திர அரசாக உருவானஆண்டு - கி.பி.1346.
90. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு - 1526.
91. கியாசுதீனின் இளைய சகோதரரின் மகன் - பிரோஷ் ஷா துக்ளக்
92. ஏழை முஸ்லீம்களுக்கு உதவுவதற்கு அறக்கட்ளைகளை நிறுவியவர்-பிரோஷ் ஷா துக்ளக்
93. இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தவர் - பிரோஷ் ஷா துக்ளக்.
94. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டி வேளாண்மையை மேம்படுத்தியவர்- பிரோஷ் ஷா துக்ளக்.
95. மத்திய ஆசியாவில் சாமர்கண்ட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்தவர்- தைமூர்.
96. தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி - பஞ்சாப்.
97. சாமர்கண்டில் நினவுச்சின்னங்களைக் கட்டுவதற்காகத் தச்சுவேலை செய்வோர் கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கைவினைஞர்களையும் உடன் அழைத்துச் சென்றவர்-தைமூர்.
98. தைமூர் தான் கைப்பற்றிய டெல்லி, மீரட், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் ஆளுநராக யாரை நியமித்தார் -கிசிர்கான்.
99. சிக்கந்தர் லோடி தலைநகர் - ஆக்ரா.
100. மசூதிகளும் மதரசாக்களும் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன அப்பாணி - இந்தோ சாராசானிக் கலைவடிவம்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.