தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? கல்வித்துறை அறிவிப்பு.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? கல்வித்துறை அறிவிப்பு..

தமிழகத்தில், 1 முதல் 9ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 13ம் தேதி துவங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்பதை கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? கல்வித்துறை அறிவிப்பு.

தமிழக கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையில் பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் பொருளாதார நெருக்கடியை சந்தித்தால் பலரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர். அதற்கு ஏற்றவாறு தமிழக அரசும் பல விதமான சலுகைகள் மற்றும் நன்மைகளை அளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என கல்வித்துறை உறுதி அளித்தது.

நடப்பு கல்வியாண்டு:

ஆனால், நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் இம்மாதம் இறுதி வரை நடைபெற்றது. அதன்படி, 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அதேபோல், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ம் தேதி ஆரம்பித்து 31ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற்றது. மேலும் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து 14ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

தமிழக பள்ளிகள் திறப்பு 2022

அதன்படி வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கல்வி ஆண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 13ம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும், அதே நாளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அரசுத்துறை சார்பாக தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments