1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு..

புதுச்சேரியில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதியும் தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பிற்கு ஜூன் 13ம் தேதியும் 12ம் வகுப்பிற்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பிற்கு ஜூன் 27 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 2022 – 2023 ம் கல்வியாண்டில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பொதுத்தேர்வு முடிவடைய உள்ளது. நாளை முதல் அம்மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. ஏற்கனவே 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு 1 – 10 வகுப்புகளுக்கு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பிற்க்கு பிறகு:

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அங்கு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 5ம் தேதி தொடங்கிய பொதுத் தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை (ஜூன் 1) முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.

அதனை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது அரசு பள்ளிகளில் பிற வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 2022 – 2023 ம் கல்வியாண்டில் புதுச்சேரியில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகள் திறக்க பட்டவுடன் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும். அதே போல மாணவர்களுக்கான பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...