1 முதல் 10 மற்றும் 12, ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு...

1 முதல் 10 மற்றும் 12, ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு...

பள்ளி மாணவர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் பொதுத் தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் இருக்கின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து ஒன்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

1 முதல் 10 மற்றும் 12, ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு...

பள்ளிகள் திறப்பு 2022:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்துள்ள வேளையில் பழையபடி மீண்டும் மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.


மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கட்டாயமாக இந்த ஆண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கொரோனாவின் காரணமாக ஆன்லைன் வகுப்பில் மாணவர்களுக்கு சரியாக பாடங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்களின் சிரமத்தை குறைக்க 35% வரைக்கும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வு முடித்துவிட்டு கோடைவிடுமுறையில் இருக்கின்றனர்.

இந்த கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்வித் திறன் குறைந்த காரணத்தினால் பல மாநிலங்களில் பள்ளிகளில் கோடை விடுமுறை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பல மாநிலங்களில் ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மே 13ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை உள்ள 30 நாட்களுக்கு கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 22 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...