TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவரா! - இப்படி படிச்சா தான் வெற்றி!
தமிழகத்தில் அறிவித்தபடி கடந்த 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து குரூப் 4 & VAO தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு எப்படி பாட வாரியாக படிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
TNPSC Group 4, VAO தேர்வர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகவும் பாதிப்படைந்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. மேலும் குரூப் 4 & VAO தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடத்த உள்ளதாகவும் இதன் மூலமாக 7000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் தமிழகத்தில் இத்தேர்வுக்கு சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். அதனால் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க வேண்டியிருக்கும். அதனால் தேர்வர்கள் எந்தெந்த பாடத்தில் இருந்து அதிக மதிப்பெண்கள் கேட்கப்பட்டிருக்கிறதோ அந்த பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்.
குரூப் 4 தேர்வுக்கு பாட வாரியாக எப்படி படிப்பது?
1. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்மொழித்தகுதி தேர்வு என்பதால் முதலில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். அதன்பின்னர் நேரம் இருந்தால் 11,12ம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும்.
2. அடுத்ததாக கணித பாடத்தில் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். கணித பாடத்திட்டத்தில் தலைப்பின் கீழ் வரும் வினாக்களை ஒவ்வொரு நாளாக பயிற்சி செய்து உங்களை தயார்ப்படுத்த வேண்டும்.
3. இதையடுத்து பொது அறிவு பகுதியை படிக்கும்போது அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். மேலும் பள்ளி புத்தகத்தில் பெட்டிச் செய்தி, அடைப்புக்குறிக்குள் உள்ள தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவைகளை நன்றாக படித்து கொள்ள வேண்டும்.
4. புவியியல் பாடப்பிரிவை படிக்கும் போது இந்திய வரைபடம், தமிழ்நாடு வரைபடம் உள்ளிட்டவை அருகில் வைத்து கொண்டு இடங்களை பார்த்து படித்தால் தேர்வு எழுதும்போது நினைவுக்கு வரும். இது உங்களை அதிக கட் ஆப் மதிப்பெண்களை எடுக்க வைக்க பேருதவியாக இருக்கும்.
5. இறுதியாக நடப்பு நிகழ்வுகளுக்கு நாள்தோறும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும். மேலும் பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு செய்திகளை கண்டறிந்து படிக்க வேண்டும்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.