தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்!

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 2022 – 2023ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு வழங்குவதற்காக இலவச பாடப் புத்தகங்கள் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்கள் தயார்!

பாடப்புத்தகங்கள் 2022-2023

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட்டு அடுத்த கட்டமாக பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. 1 -9 ம் வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்களுக்கு மே 13 முதல் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு 2022

மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பிற்கு பிறகு மாணவர்களுக்கு வழங்க இலவச பாட புத்தகங்கள் தயாராகி வருகிறது. அதன்படி 1 – 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 2022 – 2023ம் கல்வியாண்டில் வழங்கப்பட வேண்டிய இலவச பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் அச்சிடப்பட்டு, அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக விநியோகிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. தற்போது பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அடுத்த கல்வி ஆண்டிற்கான இலவச பாடப் புத்தகம் தற்போது வரப்பெற்று தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அம்மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்கான, அனைத்து பாடத் திட்டங்களுக்கு உரிய புதிய புத்தகங்கள் வந்தடைந்துள்ளது. அதனை தொடர்ந்து ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடப் புத்தகங்கள் வந்துள்ளது. ஜூன் மாதம் பள்ளி திறப்பு அன்று முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாட புத்தகம் வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Post a Comment

0 Comments