தமிழகத்தில் ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு – முக்கிய முன்னேற்பாடு ஆலோசனை..
தமிழகத்தில் தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி திறப்பதற்கான தேதியும் பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக திட்டமிட்டுள்ளது.
பள்ளி திறப்பு தேதி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. அத்துடன் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. மேலும் நடப்பு ஆண்டில் நேரடி வகுப்புகள் குறைவாக நடைபெற்றதால் மாணவர்களின் சுமையை குறைக்க பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது. அதனால் பொதுத்தேர்வுக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டது.
மாணவர்களுக்கு மனச்சுமை
இது மாணவர்களுக்கு மனச்சுமையை அதிகப்படுத்தியது. அதனால் இந்த கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், இதில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி அன்று அடுத்த கல்வியாண்டு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.