1 -12 பள்ளிகள் திறப்பு -தொழிற்கல்வி ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள்

பள்ளிகள் திறப்பு -தொழிற்கல்வி ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள்

கல்வியாண்டு தொடக்கத்தில் மாணவர்களை நல்வழிப் படுத்தும் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் 

ஜி. பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் :

   1. சமீப காலமாக மாணவர்கள் பல்வேறு ஒழுங்கீன செயல்களில் செயல்படுவது முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டும்.


2. வகுப்பு வாரியாக பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை நடத்தப் பட வேண்டும்.


3. தொடக்கத்தில் ஒரு மாதத்திற்கு அடிப்படை கல்வி  மட்டுமே போதிக்கப் பட வேண்டும்.


4. மாணவர்களை நல்வழிப் படுத்தும் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட  வேண்டும்.


5. நீண்ட நாட்களாக தவிர்க்கப் பட்டு வரும் உடற்பயிற்சி வகுப்புகள் விளையாட்டு மைதானங்களில் நடைபெற வேண்டும்.


6. கையெழுத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கையெழுத்துப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.


7. செல் போன், விலை உயர்ந்த பொருட்கள் பள்ளிக்கு கொண்டு வருவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.


8. பள்ளி அருகில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பவர்களை கண்டறிந்து தண்டணை வழங்க வேண்டும்.


9. சீரான சிகை அலங்காரம், சீருடை முதலானவற்றை கட்டாயப்படுத்த வேண்டும்.


10. பெற்றோர்களிடம் உறுதிமொழிப் படிவம் பெற்று பள்ளிகளில் கோப்பில் வைக்க வேண்டும்.


11. மாணவர்கள் இருசக்கர மோட்டார் வாகனம் இயக்க தடை விதிக்க வேண்டும்.


12. மாணவர்களின் தினசரி இருவேளையும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்து மதிப்பெண் வழங்க வேண்டும்.


13. இலவச பாடநூல்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவேண்டும்.


14. மாணவர்களிடையே தேர்வு பயத்தை போக்க மாதந்தோறும்  சிறு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.


15. ஆய்வு அலுவலர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறைகளை கேட்டறிந்து அவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...