அறிவியலும் கணிதமும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிவிப்பு - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையையும் கணிதம் குறித்த அறிவையும் வளர்க்க எங்கும் அறிவியல் யாவும் கணிதம் (STEM) எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த புதிய திட்டம் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
தமிழ்நாட்டில் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலும் கணிதமும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓர் அறிவிப்பு காத்திருக்கிறது.
குழந்தைகளுக்கு அறிவியல் மற்றும் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் பின்னாளில் ஒரு குழந்தை என்னவாகப் போகிறது என்பதற்கான அடித்தளத்தை அமைக்க முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மேலும் , அறிவியலையும் கணிதத்தையும் ஒரு குழந்தை சரியான முறையில் புரிந்து கொண்டால் அதன் கேள்வி கேட்கும் திறன் அதிகமாகும். இப்படி குழந்தைகளின் தர்க்கரீதியான சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு ஓர் வாய்ப்பு பள்ளிக்கல்வித்துறை வழங்க இருக்கிறது
இந்த அறிவிப்பினை தெரிந்துக்கொள்ள 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களை பின்வரும் படிநிலைகளை பின்பற்ற எதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களில் இருக்கும் ஒவ்வொரு பள்ளிக்கும் இத்தகவலை தெரிவிக்க சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : ஆசிரியர்கள் இந்த அறிவிப்பு சார்ந்த விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படி நிலைகளைப் பின்பற்றி எமிஸ் தளத்தில் தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.