12th History Important Questions - Public exam 2023 ( Tamil medium)

12th History Important Questions - Public exam 2023 ( Tamil medium)

12th History Important 2 Mark Questions - Public exam 2023

  1. தேசியம் என்றால் என்ன?
  2. "அவுரி கலகம்” குறித்து குறிப்பு வரைக 
  3.  "இல்பர்ட் மசோதா வின் முக்கியத்துவத்தை விவாதி
  4. நவீன கல்வியில் சமயப் பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக? 
  5.  தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக
  6. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களை கண்டறிக
  7. அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திர பத்திரிக்கைகளின் பெயர்களை கூறுக் 
  8.  இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?
  9.  "பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா" குறித்து எழுதுக.
  10. தேசியவாதிகளால் “ரௌலட் சட்டம்" ஏன் எதிர்க்கப்பட்டது ?
  11.  பி.ஆர்.அம்பேத்கரால் வழி நடத்தப்பட்ட "மஹத் சத்தியாகிரகம்" பற்றி அறிவது என்ன ?
  12. காந்தி-இர்வின் ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது எது ? 
  13. புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது
  14. இரண்டாவது லாகூர் சதி" என்றறியப்படும் நிகழ்வு யாது?
  15.  “கௌராக்க்ஷினி" சபை பற்றி குறிப்பு வரைக?
  16. இந்து முஸ்லீம்களிடையே பிரிவினை ஏற்பட காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை? 
  17. லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன ?
  18. ஆகஸ்ட் கொடையின் சிறப்பை எழுதுக
  19.  சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன? 
  20.  கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தினார்?
  21. இணைப்புறுதி ஆவணம்" பற்றி நீவிர் அறிவது யாது ?
  22. அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக ? அரசமைப்பின் ஷரத்து 370-ன் முக்கியத்துவம் என்ன ?
  23.  “ஜே.வி.பி. குழு'' பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன ?  
  24. ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த கடமைகள் யாவை ?
  25.  "பூமிதான இயக்கம்" பற்றி எழுதுக?
  26. பிளாரன்ஸின் "மெடிசி குடும்பம்" பற்றி குறிப்பு வரைக?
  27. “வோர்ம்ஸ் சபை" யின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும் 
  28. . "நட்சத்திர சேம்பர்" உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது? 
  29. "டிரென்ட் சபை"யின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்
  30. வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்?
  31. “பாஸ்டன் தேநீர் விருந்து" குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
  32. சாரடோகா போரின்" முக்கியத்துவம் குறிப்பிடுக?
  33. தொழிற்புரட்சியின் சிறப்பு கூறுகளை முன்னிலைப் படுத்தி காட்டவும்
  34.  சாமுவெல் சிலேட்டர் ஏன் அமெரிக்க தொழிற்புரட்சியின் தந்தையென கருதப்படுகிறார்?
  35. பீட்டர்லூ படுகொலையின் பின்னணி யாது? 
  36. "அறுபது நபர்கள் வழங்கிய அறிக்கை" பற்றி நீவிர் அறிந்தது யாது?
  37. இத்தாலியை மெட்டர்னிக் "வெறும் பூகோள வெளிப்பாடே" என ஏன் கூறினார்?
  38. "இரவலர் சட்டங்கள்" பற்றி விவரமாக எழுதுக ?
  39. போலியான பொருளாதார "பகட்டுக் காலம்" பற்றி நீவிர் அறிவதை கூறுக. 
  40. "மூவர் தலையீடு" எனப்படுவது யாது ?
  41. ஜட்லாந்துப் போரின் முக்கியத்துவம் பற்றி எடுத்தியம்புக?
  42. "நிகிலிசம்" என்றால் என்ன ? 
  43.  "லேட்டரன் உடன்படிக்கை" எவ்வாறு முசோலினியின் அதிகாரத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கியது?
  44. "மூன்றாவது ரெய்ச்" என்றால் என்ன ?
  45.  “ரோம்-பெர்லின்" அச்சின் உருவாக்கத்திற்கு பின்புலமாக அமையப் பெற்றது எது? 
  46.  "மூனிச் ஒப்பந்தத்தின்" கூறுகள் யாவை ?
  47.  "பேர்ல் துறைமுகத்தை" ஜப்பான் தாக்கியதின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக? 
  48. அட்லாண்டிக் பட்டயத்தின் சிறப்புக் கூறுகளைப் பட்டியலிடுக?
  49. ஐநா.சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்" எனும் தீர்மானத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும். 
  50.  பனிப்போர் காலக்கட்டத்தை சேர்ந்த மறைமுக போர்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.

12th History Important 3 Mark Questions - Public exam 2023

  1. மெக்காலேயின் "இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை" ஆய்க. 
  2. பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக்கூலித் தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது.
  3. காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணங்கள் சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக. 1908-இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவிர் அறிவது யாது? 
  4. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக
  5. பிபின் சந்திரபாலின் விடுதலை நாளை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசிய இயக்கத்தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதன் விளைவு யாது?
  6. வ.உ.சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகள் குறித்து எழுதுக ? 
  7. கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார் ?
  8. "ஜாலியன் வாலாபாக் படுகொலை" குறித்து குறிப்பு எழுதுக 
  9. பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது ?
  10. மாற்றத்தை விரும்புவர்கள் - மாற்றத்தை விரும்பாதவர்கள் வேறுபடுத்துக?
  11. சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதலை நடத்த சூரியா சென் எவ்வாறு திட்டமிட்டார் ? 
  12. டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக?
  13. தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக? 
  14. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக?
  15. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பதற்கான காரணங்களை விளக்குக ? 
  16. எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் "வெள்ளையனே வெளியேறு இயக்கம்" பற்றி சிந்தித்தார்?
  17. காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்?
  18.  இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை ?
  19.  பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான விளைவுகளை சுட்டிக்காட்டுக?
  20. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக ?
  21. இந்தியாவில் பசுமைப் புரட்சியின் விளைவுகள் யாவை ?
  22. பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?
  23. மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி விளங்கியது ஏன் ? 
  24. வர்த்தகப் புரட்சியின் எதிர்மறை விளைவுகள் என்ன ?
  25. ஐரோப்பாவில் எதிர் சீர்த்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி
  26. 1492-இல் கொலம்பஸ் மேற்கொண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக
  27.  “அமெரிக்கப் புரட்சி"யின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க ? 
  28.  "செப்டம்பர் படுகொலைகள்" எதனால் ஏற்பட்டது?
  29. .தொழிற்புரட்சியின் இரண்டாம் கட்டத்தில் ஜெர்மனியில் நடந்தது என்ன?
  30. ."பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம்" - தெளிவுபடுத்துக.
  31. .தனது தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியர்களின் முன்னேற்றத்திற்கு "இராபர்ட் ஓவன்' மேற்கொண்ட முன்னோடி தன்மையிலான நடவடிக்கைகளை மதிப்பிடுக.
  32. "பாரிஸ் கம்யூனை" நோக்கி வழி நடத்திச் சென்ற சம்பவங்களின் அடிச்சுவட்டை ஆராய்க
  33. முதல் மொராக்கோ சிக்கல் எவ்வாறு நிகழ்ந்தது ? 
  34. .அகழிப் போர் எவ்வாறு நடத்தப்பட்டது ?
  35. மிக ஆபத்தான ர-படகுகள் மற்றும் Q-கப்பல்கள் பற்றி நீவீர் அறிந்தது என்ன? 
  36. போரில் அமெரிக்கா நுழைந்த பிறகு நிகழ்ந்தவற்றை வரிசைக்கிரமமாக எடுத்துக் கூறுக. 
  37. பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாக முடித்து வைத்த சிக்கல்கள் பற்றி குறிப்பு வரைக.
  38. பொருளாதார பெருமந்தம் எவ்வாறு அரசியல் தளத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தியது என்பதனை விளக்குக 
  39. ஸ்டாலின்கிராடை ஆக்கிரமிப்பதற்கு ஹிட்லர் ஏன் அதிக அக்கறை கொண்டார்? அது அவரின் "வாட்டர்லூவாக" மாறிப்போனது எவ்வாறு என்பதனை கட்டுக?
  40. "ஹக்" கிளர்ச்சியின் முக்கியத்துவம் யாது ?
  41. சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக
  42. இந்தோனோசியா விடுதலைக்கு சுகர்னோ ஆற்றிய பங்கை மதிப்பிடுக 
  43. ஐ.நா. சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பல்வேறு கட்டங்கள் குறித்து எழுதுக .
  44. நேட்டோவை போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை?
  45. நேட்டோ உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்
  46.  சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக

12th History Important 5 Mark Questions - Public exam 2023

  1. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வு தோன்ற காரணமான சமூக - பொருளாதாரக் காரணிகளை ஆய்க
  2. இந்திய தேசிய இயக்கத்தில் லால் பால் பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.
  3. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின், செயல்பாடுகள் குறித்து எழுதுக?
  4. ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி
  5. ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்து சட்டமறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?
  6. இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.
  7. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும் 
  8. "இராஜாஜி திட்டம்" பற்றி ஒரு பத்தி எழுதுக
  9. இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது 
  10. சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன? அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக
  11. சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக 
  12. முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக
  13.  இந்திய விடுதலைக்குப் பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.
  14. அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் குறித்து விவாதிக்கவும்
  15. தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடர்கிறது? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?
  16.  இத்தாலி இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது?
  17. ஒருங்கிணைந்த ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்கே" என ஏன் சொல்லப்படுகிறது?
  18. முதல் உலகப்போரின் காரணங்களையும் விளைவுகளையும் கணக்கிடுக.
  19. இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்பதனை தகுந்த காரணத்தோடு விளக்குக
  20. இரண்டாம் உலகப்போர் ஏற்பட. ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிற்கு காரணமானவர்கள் என்பதனை ஆய்ந்து கூறுக
  21. அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டுக.

Post a Comment

1 Comments

  1. Cumplsory questions upload pannunga for history Tamil medium

    ReplyDelete

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.