10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு..!!வெளியான அறிவிப்பு!!

10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு..!!வெளியான அறிவிப்பு!!


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் முதல், பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில், பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 தேதி வரை நடைபெற்றது. இந்த பிளஸ் 2 தேர்வை 8,33,885 மாணவர்கள் எழுதி உள்ள நிலையில், 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 94.03 தேர்ச்சி சதவீதம் பதிவாகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தற்போது, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளுக்கான தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வினை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி உள்ளனர்.

இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிந்த, நிலையில் மே மாதத்தின் 3வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேதி குறிப்பிடாமல் முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 19ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments