அரசு போக்குவரத்து கழகத்தில் 750 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை

அரசுபோக்குவரத்துக்கழகத்தில் 750 பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட் டம் ஆலத்தூர் தாலுகா தெற்கு மாதவி கிராமத்தில் மருதையாற்றில் ரூ.30லட்சம் செலவில் 4,500 மீட்டர் வரை தூர்வாரும் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். 

இதன்பின்னர் அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:பேருந்து சேவைகள் எங்காவது நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தால் கண்டிப்பாக அந்த சேவையினை தொடங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 625 பேர், கும்பகோணம் அரசு போக்குவரத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் 125 பேர் மற்றும் இதர போக்குவரத்து கழகத்தில் தேவைக்கேற்ப பணியாளர்களை நிரப்ப உத்திரவிட்டுள்ளதை தொடர்ந்து இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 15 வருடங்கள் நிறைவடைந்த பேருந்துகளை இயக்க கூடாது என்று ஒன்றிய அரசு உத்திரவிட்டதன் அடிப்படையில் புதிதாக 2000 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...