12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு முக்கிய தகவல் - தேர்வுத்துறை அறிவிப்பு!


பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, திட்டமிட்டபடி வரும் 8-ம் தேதி காலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் 79 மையங்களில் நடந்து வந்தன. முப்பதாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டதால், கடந்த வார இறுதியில் இந்த பணிகள் நிறைவடைந்தன. இதை அடுத்து, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளும் விரைவாக முடியும் என்பதால், 

ஏற்கனவே அறிவித்தபடி வரும் 8 ம்  தேதி காலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, 11 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை முடிவடைய இருக்கின்றன. இதன் முடிவுகள் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக உள்ளதாகவும் தேர்வுத்துறை கூறியுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...