TNPSC இன்றைய 2 புதிய முக்கிய அறிவிப்புகள்!

TNPSC இன்றைய 2 புதிய முக்கிய அறிவிப்புகள்!

அறிவிப்பு 1 - 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 4/2023, நாள் 31.01.2023- இன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள்/ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) நடைபெற உள்ளது.

தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில்

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் ( Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை(Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

Notification Download Here

அறிவிப்பு 2

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 2020 (தொகுதி-1 Group-I Services} இல் அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 08.05.2023 (10.00 16.05.2023 (அரசு வேலை நாட்களில்) மாலை 5.45 மணிக்கு முன்னர் தங்களது மூலச் சான்றிதழ்களை (Original Certificates) ஸ்கேன் (Scan) செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் முதனிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 200/- (ரூபாய் இருநூறு மட்டும்) செலுத்த வேண்டும். அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் 15.05.2023 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள், சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாளுக்குள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வில் (Main Written Examination) கலந்து கொள்ள விருப்பமில்லை எனக் கருதி அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Notification Download Here

#

TNPSC NOTIFICATION அனைவராலும் கவனிக்கப்படாமல் தவற விட வாய்ப்பு அதிகம் 

அதனால் யாரேனும் ஒருவருக்கு பயன்படும் மறக்காமல் share பண்ணுங்க.

 


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...