தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறையின் புதிய திட்டம்!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறையின் புதிய திட்டம்!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலும், கணிதமும் கற்பிக்கும் நோக்கில் எங்கும் அறிவியல் யாவும் கணிதம் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த விவரங்களை ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

புதிய திட்டம்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. பிறகு கால அட்டவணையின் படி கடந்த 5ம் தேதி 12ம் வகுப்புக்கு, 6ம் தேதி 10ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு தொடங்கியது. அதே போல 1 – 9ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு தொடங்கி நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் உங்களுக்கு

1 -12 பள்ளிகள் திறப்பு -தொழிற்கல்வி ஆசிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள்

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன் படி முதல் கட்டமாக காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு பள்ளிக் கல்வித்துறை 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை திறம் பட கற்பிக்க அறிவியல் யாவும் கணிதம் என்ற புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது.

அறிவியலும் கணிதமும் : 

அதாவது அறிவியலையும், கணிதத்தையும் ஒரு குழந்தை சரியான முறையில் புரிந்து கொண்டால் அதன் கேள்வி கேட்கும் திறன் அதிகமாகும். இப்படி குழந்தைகளின் தர்க்கரீதியான சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு ஓர் வாய்ப்பாக இத்திட்டம் உள்ளது. இது குறித்த அறிவிப்பினை முழுமையாக தெரிந்து கொள்ள 6, 7, 8ம் வகுப்புகளுக்கு கணிதம் கற்று தரும் ஆசிரியர்கள் திட்டம் குறித்த படிநிலைகளை எமிஸ் இணையதளத்தில் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த எங்கும் அறிவியல் யாவும் கணிதம் திட்டம் குறித்து மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

1 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...