மத்திய, மாநில அரசு பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடையலாம் என சென்னை கலெக்டர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசு பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடையலாம் என சென்னை கலெக்டர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழக காவல் துறையில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிடவுள்ளது. இதுமட்டுமின்றி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 7,500 காலிப் பணியிட தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள்www.ssc.nic.inஎன்ற இணைய தளம் மூலம் மே 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கான தேர்வில் சென்னை, கண்ணகி நகர், எழில் நகர் திட்டக்குடியிருப்பு பகுதியில் மறுகுடியமர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம், எழில் நகர் சுனாமி குடியிருப்பில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தனியே நடத்தப்பட்டு வருகின்றன.
தகுதிவாய்ந்த பயிற்றுநர்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த பயிற்சி வகுப்பில் நூலக வசதி, இலவச பாடதிட்டங்கள், மாதிரி தேர்வுகள், வீட்டிலிருந்தே பயிலும் வகையிலான இணையதள பாட திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு தொடர்பான ஆலோசனைகளும், பணி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் இளைஞர்களின் வசதிக்காக நாள்தோறும் மாலை 4 முதல் 7 மணி வரையும் வார இறுதி நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே, கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.