+2 முடிவுகள் வெளியிடப்பட்டது! அதில் எது சாதனை...?


எது சாதனை...???


என்னை பொருத்தவரை அரசு பள்ளியின் 89.80% என்பது மெச்ச தகுந்தது. பெரிய பின்புலம்,  கட்டுமானங்கள்,  ஆய்வகங்கள் இல்லாத அரசு பள்ளிகளில் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியதே பெரிய சாதனைதான். 

அரசு பள்ளி ஆசிரியர்களே  உங்களுக்கு எங்கள் பாராட்டுகள். 


1. அரசு பள்ளி மாணவனுக்கு டியூசன் சென்டர் செல்ல வாய்ப்பில்லை... 


பலருக்கு வசதியில்லை....


2. சரியான போக்குவரத்துக்கு வசதில்லாமல் நடந்து, கசங்கி, நசுங்கி களைத்து பள்ளி வரும் மாணவர்கள்...


பலநாட்களில் பள்ளிக்கு வராத மாணவர்கள்...


3. மிகக் கடுமையான வறுமையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு போனால் படின்னு சொல்லக்கூட ஆள் இல்லாத மாணவர்கள்...


படிப்பின் வாசனை அறியாத பெற்றோர்கள்...


4. பகுதி நேரமாக அப்பாவின் தொழிலையோ காடு கரை வேலையையோ பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவர்கள்...


நல்ல உணவைக் கூட கண்டறியாத மாணவர்கள்...


5.இன்னும்  வெளிச்சம் கிடைக்காத மலைக்கிராமத்து மாணவர்கள்...


வெளி உலகத்தினை அறியாத குடும்பத்து மாணவர்கள்...


6. நமக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரம்...


 வீட்டுல திட்டுறாங்களேன்னு பள்ளிக்கூடம் வரும் மாணவர்கள்...


7. டாஸ்மார்க்கில் குடி ஒன்றே உலகம் என வாழும் பெற்றோர்கள்...


இரவு முழுவதும் சண்டையிடும் பெற்றோர்கள்...


8. ஓராசிரியர் ஈராசிரியர் பள்ளிகளில் அடிப்படைக் கல்வி பயின்ற மாணவர்கள்...


கட்டிடமே இல்லாத பள்ளி கூட்டத்தில் அடிப்படை கல்வி அறிந்த மாணவர்கள்...


9. SLOW LEARNERS மாணவர்களின் தஞ்சம் அரசு பள்ளியே.


இப்படியான மாணவர்களே அரசு பள்ளிகளில் படிக்கிறார்கள்...


அவர்களை இந்தளவுக்கு கரை சேர்ப்பது எவ்ளோ பெரிய விசயம்...


அனைத்தையும் கொண்டு சாதிப்பது சாதனை அல்ல...


 எதுவும் இல்லாத சூழ்நிலையில் சாதிப்பதே சாதனை...


சாதித்த சாதனையாளர்களான அரசு பள்ளி  ஆசிரியர்களுக்கு , மாணவர்களுக்கும் SSTA வின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

Post a Comment

0 Comments