ரூ.5000 சேமித்தால் ரூ.8 லட்சம் வருமானம்! போஸ்ட் ஆபிஸின் அருமையான சேமிப்புத் திட்டம்!


கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளை முதலீடுகளுக்காக தேர்வு செய்கிறார்கள்.

இருப்பினும், நிலையான வைப்பு மற்றும் தொடர் வைப்புத்தொகைகளுக்கு இன்னும் அதிக தேவை உள்ளது. அவற்றில் சந்தை அபாயம் குறைவும் கூட.

நாட்டின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து தபால் நிலையங்களும் இந்த வகையான சேவைகளை வழங்குகின்றன. அஞ்சல் துறையில் RD-க்கள் பிரபலமான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு தேர்வாக உள்ளது. தபால் அலுவலக RD திட்டங்கள் சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ் வருகின்றன. இதற்கு முன்பு இவற்றுக்கான வட்டி 5.8 சதவீதமாக இருந்தது. இருப்பினும், 2023 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 6.2 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பாரம்பரிய முதலீட்டாளர்கள் அஞ்சல்துறை சேமிப்பு திட்டங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.

ரெகுலர் ரெக்கரிங் டெபாசிட் மற்றும் ஃப்ளெக்ஸி ரெக்கரிங் டெபாசிட் என இரண்டு வகையான ஆர்டி திட்டங்கள் உள்ளன. வழக்கமான RD திட்டங்களில், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகை டெபாசிட் செய்யப்படுகிறது. உதாரணமாக 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 4000 வைப்புத் தொகையைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் ஃப்ளெக்ஸி தொடர் வைப்பில் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப மாதாந்திர வைப்புத்தொகையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.

FD-க்களைப் போலன்றி, RD-களில் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே டெபாசிட் செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக ஒவ்வொரு மாதமும் சிறிய தொகையை டெபாசிட் செய்யலாம். சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி கிடைக்கும். ஆனால் FD-க்களை விட வட்டி குறைவு. ஐந்து ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை ஆர்.டி சேமிப்பு திட்டங்களை தேர்வு செய்யலாம்.

RD-யில் வட்டி கணக்கிடுவதற்கான சூத்திரம்

M = R [(1+i)n - 1]/1-(1+i)(-1/3)

இங்கு M என்பது முதிர்ச்சியின் போது பெறப்பட்ட தொகையைக் குறிக்கிறது. R என்பது மாதாந்திர தவணைகளின் எண்ணிக்கை. N என்பது RD முதிர்ச்சியைக் குறிக்கிறது மற்றும் i என்பது வட்டி விகிதத்தைக் குறிக்கிறது.

ரூ.5 ஆயிரம் டெபாசிட் மூலம் ரூ.8.3 லட்சத்தை பெறுவது எப்படி?

தபால் நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் RD-யில் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு 6.2 சதவீத வட்டியுடன் 3.52 லட்சம் ரூபாய் பெறலாம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மொத்த வருவாய் 8.32 லட்சமாக உயரும். ஆனால் வட்டி விகிதம், RD முதிர்ச்சிகாலம், மற்ற விவரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று விசாரிப்பது நல்லது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...