ஜூலை 2 வரை கோடை விடுமுறை – பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!


பள்ளி மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஜூலை இரண்டாம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை என பள்ளி பஞ்சாப் மாநில கல்வித்துறையின் சார்பில் புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • 💯 11th,12th study materials, Guide - Pdf Download 2023-2024
  • 💯 8,9,10th study materials, Guide - Pdf Download 2023-2024
  • கோடை விடுமுறை

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து 2023 – 24 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட இருக்கிறது. அதே போல, தமிழகத்திலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு ஏப்ரல் 28ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் 29 முதல் மே 31ஆம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி வகுப்புகள் துவங்கும் எனவும், 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 1ஆம் தேதி துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் ஜூலை இரண்டாம் தேதி வரைக்கும் கோடை விடுமுறை எனவும் ஜூலை 3 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸின் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

    Share:

    +2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் இன்று (மே 30) மதியம் நகல் வெளியிடப்படும் !


     +2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல்  இன்று (மே 30) மதியம் நகல் வெளியிடப்படும் ..!

    தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பு:

    +2 தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (மே 30) மதியம் நகல் வெளியிடப்படுகிறது.

    இதையடுத்து மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்பிறகு மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அதே இணையதள பக்கத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    இதை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து நாளை (மே 31) முதல் ஜூன் 3ம் தேதி வரை சம்பந்தபட்ட மாவட்ட தேர்வு உதவி இயக்குநர் அலுவலகங்களில் சென்று ஒப்படைக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305-ம், இதர பாடங்களுக்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தேர்வர்கள் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    Share:

    Ennum Ezhuthum - Block level training schedule

    4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் வட்டார அளவில் நடைபெறும் பயிற்சியின் கால அட்டவணை.




    Share:

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் 7.5 % இடஒதுக்கீட்டில் பயில முடியுமா? - RTI Letter!


    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் அரசு பள்ளியில் பயின்ற ( ஆறாம் வகுப்பு முதல் பணிரெண்டாம் வகுப்பு வரை ) மாணவர்கள் 7.5 % இடஒதுக்கீடு ( பொதுப்பாடப்பிரிவினர் மற்றும் தொழிற்கல்வி பிரிவினர் ) பெற்று உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.

    Share:

    SBI Mutual Fund-ல் RM - SBI Channel காலிப்பணியிடங்கள்!

    SBI Mutual Fund Recruitment 2023 - Apply here for RM - SBI Channel Posts - 01 Vacancies

    SBI Mutual Fund .லிருந்து காலியாக உள்ள RM - SBI Channel பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: 

    SBI Mutual Fund

    பணியின் பெயர்: 

    RM - SBI Channel

    மொத்த பணியிடங்கள்: 

    01

    தகுதி: 

    அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஏதேனும் ஒரு Degree தேர்ச்சியுடன் 2 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    வயது வரம்பு: 

    வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    முன் அனுபவம்:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 6 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    தேர்வு செயல்முறை: 

    விண்ணப்பதாரர்கள் நேர்காணல் / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் முறை: 

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Notification for SBI Mutual Fund 2022: Download Here

    Apply: Apply Now


    Share:

    8 இயக்குநர்களுக்கு பணியிட மாறுதல் பள்ளி கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் நியமிக்க வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்!


    பள்ளிக்கல்வித்துறையில் 8 இயக்குநர்களுக்கு பணியிடமாறுதல் வழங்கப்படவுள்ளது. இதையடுத்து ஆணையர் பதவியே ரத்தாகும் நிலையில், மீண்டும் பள்ளிக்கல்விக்கு இயக்குநர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


    அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அவர் அமைச்சராக இருந்தபோது தான் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு குளறுபடிகள் உருவானது. குறிப்பாக ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்ட அம்சங்கள் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் நுழைய தொடங்கியது.


    அதன்படி பள்ளிக் கல்வித்துறைக்கு ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அந்த பதவி உருவாக்கப்பட்ட பிறகு ஐ.ஏ.எஸ்., அதிகாரி நந்தக்குமார் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு குளறுபடிகள் பள்ளிக் கல்வித் துறையில் உருவானது. அதாவது காலையில் ஒரு உத்தரவு வரும், அது குறித்து யாராவது கருத்து தெரிவிக்கும் பட்சத்தில் மாலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு மறுஉத்தரவு வரும். இதையடுத்து ஆணையர் பதவியை ரத்து செய்வது என அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த வாரம் ஆணையர் பதவியில் இருந்து நந்தக்குமார் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.


    இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள துறைகளில் 10 இயக்குநர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் 8 இயக்குநர்கள் பணியிடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


    அதன்படி பள்ளிக் கல்வித் துறையில் ஆணையருக்கு பதிலாக இயக்குநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் போது ஆணையர் பதவி ரத்தாவது உறுதியாகிவிடும். தற்போது பணியிட மாறுதலுக்கான கோரிக்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், விரைவில் இதற்கான உத்தரவு வெளியாகும் என்று தகவல்கள் கூறப்படுகிறது.

    Share:

    அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!

    அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு...

    கலந்தாய்வு சார்ந்த தகவல்

    முன்னுரிமை மற்றும் காலிப் பணியிடம் சரிபார்ப்பு பணி உள்ளதால் 29.05.2023 திங்கட்கிழமை அன்று நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 30.05.2023 செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தங்கள் பள்ளியில் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த பட்டதாரி ஆசிரியர்கள் 30.05.2023 செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:30 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய தகவல் வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள்.

    Share:

    இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை 5-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர்சேர்க்கை நடைபெற உள்ளது. 

    இந்தப்படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி முதல் 15ந்தேதி வரை https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    அவ்வாறு விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

    இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.


    Share:

    TNPSC -ஒருங்கிணைந்த பொறியியல் சார் நிலை பணி 1,083 பணியிடத்துக்கு 50 ஆயிரம் பேர் எழுதினர்!


    ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் அடங்கிய 1,083 இடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 50 ஆயிரம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர் பதவியில் காலியாக உள்ள 794 இடங்கள், நெடுஞ்சாலை துறை இளநிலை வரைதொழில் அலுவலர் 236 இடம்.


    பொதுப்பணித்துறையில் இளநிலை வரை தொழில் அலுவலர் 18 இடம், நகர் ஊரமைப்பு துறையில் வரைவாளர்(கிரேடு 3) 10 இடம், சிறுதொழில் நிறுவனத்துறையில் முதலாள்(கிரேடு 2) 25 இடங்கள் என ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய 1,083 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, கடந்த பிப்ரவரி 3ம் தேதி வெளியிட்டது.


    தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் 4ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வு எழுத 52,025 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 40,616 பேர், பெண்கள் 11,407 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதள் தாள் தேர்வு நடந்தது. பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை 2ம் தாள் தேர்வும், அதாவது கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வும், பொது அறிவு தேர்வும் நடந்தது.


    இத்தேர்வுக்காக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. 133 இடங்களில் 172 தேர்வு அறைகளில் இந்த தேர்வு நடந்தது. சென்னையை பொறுத்தவரை 29 இடங்களில் 30 தேர்வு அறைகளில் இந்த தேர்வு நடந்தது.


    தேர்வு கண்காணிப்பு பணியில் 172 தலைமை கண்காணிப்பாளர் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டிருந்தனர். தேர்வு நடைபெற்ற அனைத்து இடங்களிலும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக கூறினர். அதே நேரத்தில் தேர்வு எழுத நிறைய பேர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

    Share:

    ஒன்பதாம் வகுப்பு புத்தகத்தில்., முத்தமிழ் அறிஞர் கருணாநிதி குறித்த பாடம்!


    ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடநூலில் முன்னாள் முதல்வா் கருணாநிதி தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்புகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


    தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தில் வரும் கல்வியாண்டுக்கான (2023-24) 9-ஆம் வகுப்பு பாடநூலில் 7-ஆம் பக்கத்தில், ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற தலைப்பில் கருணாநிதியின் தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


    அதன் விவரம்: செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடத்தில், கருணாநிதியின் நாவும் பேனாவும் தமிழுக்கு ஆயுதங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி இமய கொடுமுடி முதல், குமரி தாய் மடி வரை செம்மொழியான தமிழ் மொழியாம் என செம்மாந்து ஒலிக்கச் செய்தவா் கருணாநிதி என அந்த பாடத்தில் கருணாநிதி குறித்து இடம்பெற்றுள்ளது.


    முன்னதாக, ‘முன்னாள் முதல்வா் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் குறித்து இந்த ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் பாடம் இடம் பெறும்’ என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஏப். 20-ஆம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share:

    இந்து நாளிதழ் - அன்பாசிரியர் 2022 விருது - விண்ணப்பிக்க அறிவிப்பு!


    மாணவர்களுக்கு பாடங் களைக் கற்பிப் பதோடு நில்லாமல், மாறுபட்ட புதிய சிந்தனை யோடு, மாண வர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக் கறையை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன்ஸ் சார்பில் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022’ விருது வழங்கப்படவுள்ளது. 


    இந்நிகழ்வை லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகியன இணைந்து வழங்குகிறது. இந்த விருதினைப் பெற விரும்பும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 2-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


    இவ்விருதினைப் பெற தகுதியுடைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். முன்னரே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க வேண்டாம்.


    இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவுசெய்து,சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 


    பதிவான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் முதல் கட்ட நேர்காணல் விரைவில் நடைபெறவுள்ளது.


    நேர்காணலுக்கு அழைக்கப்படும் ஆசிரியர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற விவரங்களையும் நேரில் கொண்டுவர வேண்டும். மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்கள், மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 39 பேருக்கு ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9843225389 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    Share:

    CPS Account Slip 2022 - 23 Published - Direct Download Link


    பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் 


    வழக்கமாக PDF வடிவில் தரவிறக்கம் செய்யும் வகையில்  கணக்கீட்டுத் தாள் கொடுக்கப்படும். ஆனால் இம்முறை 2022-2023ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்கீட்டுத் தாளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரி என ஒப்புக் கொள்கிறேன் / ஒப்புக்கொள்ளவில்லை என உறுதிப்படுத்திட கேட்கப்பட்டுள்ளது.

    Click Here - CPS Account Slip  2022 - 23 - Direct Download Link

    Share:

    4,5 வகுப்பு எண்ணும், எழுத்தும் பாடக்குறிப்பு எழுதும் முறை மாதிரி!

    4,5 வகுப்பு எண்ணும், எழுத்தும் பாடக்குறிப்பு எழுதும் முறை மாதிரி



    Share:

    10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த விளக்கம்!


    10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த விளக்கம்!

    june 2023 applying reg pdf - Download here


    Share:

    தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்., அதிரடி சரவெடி!


    வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    முன்னதாகத் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி இன்று (மே 26) அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவ்வாறு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


    திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:


    ’’பள்ளிகள் திறப்பு குறித்த தலைமைச்செயலாளர் மற்றும் முதன்மைச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கான ஆணைகள் தயாராகி வருகின்றன. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் உள்ள முதலமைச்சர் இதுகுறித்துக் காலையிலேயே தொலைபேசியில் பேசியுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறக்க முதமைச்சரிடம் 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’’.

    Share:

    இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு!


    இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 5ல் துவங்குகிறது.

    இதுகுறித்து, கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன் வெளியிட்ட அறிவிப்பு:

    இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 5 முதல் 14 வரை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கும். இதற்கான கால அட்டவணை, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

    மாணவர்கள் தங்களுக்கான நேரத்தில், நேரடியாக அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். சான்றிதழ்களின் இரண்டு நகல்களுடன், தேவையான படிவங்களையும் எடுத்து வர வேண்டும்.

    விளையாட்டு வீரர் ஒதுக்கீடுக்கு மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு நேரடியாக நடக்கும்; மற்றவர்களுக்கு ஆன்லைன் வழியே சரிபார்க்கப்படும்.

    இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

    Share:

    CPS Account Slip - இன்று வெளியிடப்படுகிறது!


    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (சிபிஎஸ்) கணக்குச் சீட்டுகள் 2022-2023 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் உருவாக்கப்பட்டு, அரசுத் தரவு மையம் மூலம் 26.05.2023 அன்று வெளியிடப்பட்டது.  காலை 10.00 மணிக்கு.  சந்தாதாரர்கள் தங்கள் CPS கணக்கு சீட்டுகளை " cps.tn.gov.in/public " என்ற இணையதளத்தில் பார்க்கலாம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம்.

    Share:

    அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு!


    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தான் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் கல்லூரி வாரியாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 25-ந்தேதி(நாளை) கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    தமிழ் மொழி பட்டப்படிப்புக்கு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனி தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புக்கு ஆங்கில பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற 4 பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.


    சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது.


    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    Admission Rank List - Click here

    Share:

    TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர் தேவை., தவற விட்டுவிடாதீர்கள்!

    ஏக இரட்சகர் சபைகளின் மூலம் சாததான்குளம் பேய்க்குளம் அருகில் உள்ள சாலைப்புதூரில் இயங்கி வரும் ஏக வட்டம் இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியில் ( அரசு உதவி பெறும் பள்ளி ) நிரந்தரமாக பணியாற்ற இளநிலை அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தேவை.



    Share:

    கோடை விடுமுறை நீட்டிப்பு: தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தேதி அறிவிக்கப்படலாம்!


    கோடை விடுமுறை நீட்டிப்பு: தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தேதி அறிவிப்பு 

    தற்போதைய தகவல்: 👇

    தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஒரு வாரம்றதள்ளி பள்ளிகள் திறக்கப்படும்., அதிரடி சரவெடி!



    பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பேட்டி


    Share:

    TNPSC - புதிய வேலைவாய்ப்பு.,அறிவிப்பு நாள் 25-06-2023


    Applications are invited only through online mode up to 23.06.2023 for direct recruitment to the posts included in the Combined Geology Subordinate Service Examination.


    TNPSC - New Notification 25.05.2023 - Download here

    Share:

    ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்குபேருந்துகளில் கட்டணம் இல்லை: தமிழக அரசு அறிவிப்பு!


    ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது, ஐந்து வயது முதல் 12 வயது குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    இதற்கான உத்தரவை உள்துறை அண்மையில் வெளியிட்டது. அந்த உத்தரவில், ஐந்து வயதுக்கு மேற்பட்ட, 12 வயதுக்கு மிகாத குழந்தைகளுக்கு அரைக் கட்டணத்தில் பயணச்சீட்டு அளிக்கப்படும். ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

    அதேசமயம், நகரம் மற்றும் பெருநகர போக்குவரத்துப் பேருந்துகளில் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share:

    8th Pay Commission : விரைவில் நல்ல செய்தி!


    மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய, முக்கிய செய்தி கிடைக்கவுள்ளது. சமீபத்தில் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டது. விரைவில் ஊழியர்களின் ஊதியமும் அதிகரிக்கப்படும். இது குறித்து, இன்னும் அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை, எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனினும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


    தற்போது அனைத்து மத்திய ஊழியர்களும் 8வது சம்பள கமிஷனை கோரி வருகின்றனர். 8 ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் இருக்கும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம். 


    தற்போது அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஏழாவது ஊதியக்குழு மூலம் அகவிலைப்படி மற்றும் பிற ஊதிய கொடுப்பனவுகளை பெறுகிறார்கள். இந்தியாவில் தற்போது அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அமலில் உள்ளது. எனினும் 8 ஆவது ஊதியக் குழு குறித்த விவாதமும் இப்போது தொடங்கியுள்ளது. அதை விரைவில் அமல்படுத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 


    2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தேர்தலுக்குப் பிறகு புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இது வரை அரசு அதிகாரப்பூர்வமாக இது பற்றி எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், புதிய ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 


    விரைவில் அதற்கான அறிவிப்பை சம்பந்தப்பட்ட அரசு வெளியிடலாம். தேர்தலுக்கு முன் இன்னும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டால், தற்போதைய ஆட்சிக்கு பெரிய பலன் கிடைக்கும். இவற்றின் மூலம் ஊழியர்களின் ஆதரவும் நடப்பு அரசாங்கத்துக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் அடுத்த ஊதியக்குழு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவருமா இல்லையா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    Share:

    IDBI வங்கியில் 1036 Executive காலிப்பணியிடங்கள்!


    IDBI வங்கி Recruitment 2023 - Apply here for Executive Posts - 1036 Vacancies - Last Date - 07.06.2023

    IDBI வங்கி .லிருந்து காலியாக உள்ள Executive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 07.06.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்

    IDBI வங்கி

    பணியின் பெயர்

    Executive

    மொத்த பணியிடங்கள்

    1036

    தகுதி

    விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஊதியம்


    1 year – ரூ.29,000/-


    2nd year – ரூ.31,000/-


    3rd Year – ரூ.34,000/-


    வயது வரம்பு: 

    விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் மே 2, 1998 முதல் மே 1, 2003க்குள் பிறந்திருக்க வேண்டும்.

    தேர்வு செயல்முறை

    • Online Test (OT)
    • Document Verification (DV)
    • Pre Recruitment Medical Test (PRMT)

    விண்ணப்பிக்கும் முறை

    படி-I: IDBI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை @idbibank.in கிளிக் செய்யவும்

    படி-II: முகப்புப் பக்கத்தில், Careers >> Current Openings என்பதைக் கிளிக் செய்யவும்

    படி-III: “Recruitment of Executive 2023-24” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.

    படி-IV: இப்போது “Apply Online” என்பதைக் கிளிக் செய்யவும்.

    படி-V: விண்ணப்பப் படிவத்தில் உங்கள் தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களை சரியாக உள்ளிடவும்.

    படி-VI: விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க அணுகக்கூடிய விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.

    படி-VII: இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பித்து எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கவும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 

    07.06.2023

    Notification for IDBI வங்கி 2022: Download Here

    Apply: Apply Now

    Share:

    முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை இறுதியில் தொடக்கம்!


    முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை இறுதியில் தொடங்குகிறது. கரோனா பெருந்தொற்றால் எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களின் பயிற்சி நிறைவடையாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது.


    இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளாமோ படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமார் 4,200 இடங்கள் உட்பட 42,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதிப் பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.


    நாடு முழுவதும் 277 நகரங்களில்...: இந்நிலையில், 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட நாடு முழுவதும் 277 நகரங்களில் 900-க்கும் மேற்பட்ட மையங்களில் ஆன்லைனில் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் பேர் உட்பட இந்தியா முழுவதும் 2.09 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். நீட் தேர்வு முடிவுகளை https://www.natboard.edu.in/, https://nbe.edu.in/ இணையதளங்களில் தேசிய தேர்வுகள் வாரியம் கடந்த மார்ச் 14-ம் தேதி வெளியிட்டது.


    அகில இந்திய ஒதுக்கீடு: நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தி வருகிறது. அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) நடத்தும்.


    முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்குமேலாகியும், இன்னும் அகிலஇந்திய கலந்தாய்வு தொடங்கவில்லை. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா பெருந்தொற்று காரணமாக எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களின் பயிற்சி ஜூலை மாதம்தான் நிறைவடையவுள்ளது. அவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அவர்களின் பயிற்சி முடிந்தும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும். அதன்பின்னர், தமிழகத்தில் கலந்தாய்வு நடைபெறும்” என்றனர்.


    இதற்கிடையில், நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு ஆன்லைனில் பொது கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருப்பதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share:

    கோடை வெப்பம், கரோனா பரவல் | பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்திட அரசுக்கு சீமான் கோரிக்கை!


    "தமிழக அரசு கோடை வெப்பத்தையும், கரோனோ நோய்த்தொற்றுப் பரவலையும் கருத்தில் கொண்டு, மாணவ மாணவியர் நலன் காக்கும் வகையில் பள்ளிகள் திறக்கும் முடிவை, தற்போதைய சூழலில் மேலும் 15 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் ஜுன் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. தாங்க முடியாத கடும் வெயில்,மற்றும் கரோனா தொற்றுப் பரவலும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக பள்ளிகளைத் திறந்து மாணவச் செல்வங்களை வாட்டி வதைக்க முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.


    உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல் மற்றும் மாறிவரும் பருவநிலை காரணமாக கோடை மற்றும் குளிர்காலங்கள் நிலவும் மாதங்களில் அண்மைக்காலமாக பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் நீண்டும், குளிர் மற்றும் மழைக்காலங்கள் குறைந்தும் வருவதோடு, கோடைக்காலத்தில் தாங்க முடியாத அளவிற்கு வெப்பம் மிகக் கடுமையாகவும் உள்ளது. கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க முடியாமல் வயது நிரம்பியவர்களே திணறி வருவதன் காரணமாக, வாய்ப்புள்ள பல தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியவும் அனுமதித்துள்ளன.


    அதுமட்டுமன்றி கரோனோ நோய்த்தொற்றுப் பரவலும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.


    ஆனால், இவற்றையெல்லாம் கவனத்திற்கொள்ளாமல் மாணவர் சேர்க்கை என்ற பெயரில் பகற்கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து தமிழ்நாடு அரசு ஜுன் 1 முதல் பள்ளிகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது ஏற்கெனவே முடியாத பெருங்கொடுமையாகும். அரசின் சிறிதும் பொறுப்பற்ற இம்முடிவு மாணவர்களின் உடல் மற்றும் மன நலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.


    ஆகவே, தமிழ்நாடு அரசு கோடை வெப்பத்தையும், கரோனோ நோய்த் தொற்றுப் பரவலையும் கருத்தில் கொண்டு், மாணவ-மாணவியர் நலன் காக்கும் வகையில் பள்ளிகள் திறக்கும் முடிவை, தற்போதைய சூழலில் மேலும் 15 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

    Share:

    அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள்., ரத்து இல்லை!


    அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப் பிரிவுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


    அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கட்டிடவியல் மற்றும் இயந்திரவியல் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக கல்விபடிப்புகளுக்கான மையத்தின் இயக்குநர் ஹோசிமின் திலகர் கடந்த 20-ம் தேதி வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    அதன்படி ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் கட்டிடவியல் மற்றும்இயந்திரவியல் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் இந்திரவியல் பிரிவில் ஆங்கில வழியும், அரியலூரில் கட்டிடவியல் பிரிவில் ஆங்கில வழியும், பட்டுக்கோட்டை, திருக்குவளையில் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE) ஆகிய பாடங்களின் ஆங்கில வழியும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் நேற்று, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் பங்கேற்க வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் இதுதொடர்பாக கேட்டபோது, “தமிழ் வழி பாடப் பிரிவுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை. தமிழ் வழியை அதிகப்படுத்தும் எண்ணம் மட்டுமே உள்ளது” என தெரிவித்தார்.

    மேலும் இது தொடர்பாக உயர்கல்வித்துறை அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “தற்போது அறிவிக்கப்பட்ட கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவில் தமிழ் வழியில் பயில யாரும் முன் வரவில்லை. ஆனாலும், ஒரே ஒரு மாணவர் தமிழ் வழியில் பயில விருப்பம் தெரிவித்தாலும் தமிழ் வழி கல்வி தொடரும்” என்றனர்.

    Share:

    EE- 4 & 5 TH STD CLASS TIME TABLE

    EE- 4 & 5 TH STD CLASS TIME TABLE
    4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் வகுப்பறை கால அட்டவணை:




    Share:

    இன்ஜி., கவுன்சிலிங் சேர்க்கை 4 ஆண்டு கட் - ஆப் வெளியீடு!

    இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக, நான்கு ஆண்டுகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.


    அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவுக்கு, வரும், 4ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. கவுன்சிலிங் ஜூலை, 2ல் துவங்க உள்ளது.


    இந்நிலையில், கவுன்சிலிங்குக்கு முன் மாணவர்கள், தங்களுக்கான கல்லுாரி மற்றும் 'கட் - ஆப்' மதிப்பெண் குறித்து, உத்தேசவிபரங்களை தெரிந்து கொள்ள, 2019ம் ஆண்டு முதல், நான்கு ஆண்டுகளுக்கான பழைய, 'கட் ஆப்' விபரங்களை கவுன்சிலிங் குழு வெளியிட்டுள்ளது.


    இந்த விபரங்கள், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. மாணவர்கள் இந்த பட்டியலை பார்த்து, தங்களின் மதிப்பெண்ணுக்கு ஏற்ற கல்லுாரிகள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என, கவுன்சிலிங் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Share:

    வங்கி வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கி திடீர் எச்சரிக்கை., தவறாமல் படிங்க!


    வங்கி வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கி திடீர் எச்சரிக்கை
    இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
    இது தொடர்பாக பொதுமக்களுக்கு அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில் கடந்த சில நாட்களாக whatsapp பயன்படுத்தும் பலருக்கும் வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.இது குறித்து எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
    அதில், வெளிநாட்டு நபர்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து கவனமாக இருங்கள். அது மோசடிக்காரர்களின் சரியாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. நம்முடைய தகவல்களை பத்திரமாக வைப்பது நமது கடமை என்பதால் இதுபோன்ற போலி அழைப்புகளை தவிர்ப்பது நல்லது.

    Share:

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்!


    தமிழ்நாட்டில்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8ஆம் தேதி காலை முதல் தொடங்கியது. 22ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 


    மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி பட்டியல் மற்றும் விவரங்கள் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன.மேலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அந்த கல்லூரிகள் குறித்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதற்காகத் தகவல் மையத்தின் தொடர்பு எண்கள் எழுதி வைக்கப்பட்டன.அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு 22ஆம் தேதி இரவு 12 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும். மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழிப் பட்டப்படிப்பு தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழிப் பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.கல்லூரி வாரியாக மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு 25ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது.

     அதனைத் தொடர்ந்து சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும், கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.


    Share:

    வருமான வரி தாக்கல் செய்ய ஆன்லைன் வசதி துவங்கியது!


    கடந்த 2022-23ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஐ.டி.ஆர்., 1, ஐ.டி.ஆர்., 4 படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வசதிகளை, வருமான வரித்துறை துவக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.

    தனிநபர்கள், தொழில் வல்லுனர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோர் தங்களது 2022-23ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை ஆன் லைனில் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை வரிமான வரித்துறை துவக்கி உள்ளது.

    பிற வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான வசதிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என, வருமான வரித் துறை அதன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. வரி செலுத்துவோரின் சிரமங்களை குறைத்திட, வருமான வரித் துறை ஐ.டி.ஆர்., 1 மற்றும் ஐ.டி.ஆர்., 4 படிவங்களின் தாக்கல்களுக்கான இணையதள சேவைகளை செயல்படுத்தியுள்ளது. 2022 - 23ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, வரும் ஜூலை 31ம் தேதி கடைசி நாளாகும்.

    Share:

    நாளும் குவியும் வழக்குகளால் பாழாகும் கல்வி!


    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பரந்து பட்டதாகும். இந்தியாவிலேயே, 1966 இல் பாராளுமன்ற அவையில் முன்வைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழு அறிக்கை காலந்தொட்டு உரிய ஆசிரியர் கல்வித் தகுதிகளுடன் அந்தந்தப் பள்ளிகளில் அதற்கு தக்க ஆசிரியர்களைப் பணியமர்த்தி நிர்வகிக்கும் பொறுப்பு மிக்க மாநிலமாக தமிழ்நாடு தற்போது வரை விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட மேற்கு வங்காளத்தில் 30000 க்கும் மேற்பட்ட தகுதியில்லாத ஆசிரியர்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டிருப்பதும் பணிநீக்கம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் ஊடகங்கள் வழி அறிந்த ஒன்றாகும்.

    தமிழ்நாடு அரசு நிர்மாணித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தேவைக்கேற்ப அவ்வப்போது தகுதி வாய்ந்த ஆசிரியர் பெருமக்களுக்குப் பலவகைப்பட்ட போட்டித் தேர்வுகள் நடத்தி வருவது எண்ணத்தக்கது. இவையனைத்தும் எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் முறைகேட்டிற்கும் ஆளாகாத வண்ணம் தன்னாட்சி அமைப்பாக வெளிப்படைத் தன்மையுடன் திறம்பட இயங்கி வருவது பாராட்டுக்குரியதாகும். 

    இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளிப் பட்டதாரி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர், நுண்கலை ஆசிரியர், கணினி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் என ஒவ்வொரு வகை ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு விதமான அரசால் வரையறுக்கப்பட்ட பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வித் தகுதிகள் கொண்டே பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் அனைத்து வகையான தலைமையாசிரியர் பணியிடங்களும் உரிய கல்வித் தகுதிகளுடன் பணிமூப்பு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும். 


    2009 இல் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் காரணமாக ஏற்கெனவே மேற்குறிப்பிட்ட புதிய ஆசிரியர் பணி நியமனங்களுக்குரிய போதிய அடிப்படைக் கல்வித் தகுதிகள் நிரம்பியவர்களுக்கு மேலும் ஒரு கூடுதல் சுமையாக முன்மொழியப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் புதிய நியமனங்கள் நியமிக்கப்பட்டு வருவது அறியத்தக்கது. இத்தகுதித் தேர்வுகள் இருவகைப்பட்டதாக அமைந்துள்ளது. இடைநிலை ஆசிரியர் புதிய பணி நியமனத்திற்கு முதல் தாளும் பட்டதாரி ஆசிரியர் புதிய பணி நியமனத்திற்கு இரண்டாம் தாளும் கட்டாயம் எழுதித் தேர்ச்சிப் பெற்றால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையில் மேலும் ஒரு கூடுதல் தேர்வுச் சுமையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனப் போட்டித் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற வேண்டிய அவலநிலை இன்றுள்ளது. 

    இத்தகைய ஓர் ஒழுங்கான அமைப்பு வழிப்பட்ட நிர்வாகத்தில் தம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்தி மாறி வரும் கால மாற்றத்திற்கேற்ப எங்கோ யாருக்கோ அடிப்படைத் தகுதியை இதுவரைக்கும் வரைமுறைப்படுத்தாத அல்லது விரும்பாத நபர்களுக்குப் பிறப்பிக்கப்படும் ஆணையில் உள்ள ஓரிரு சொற்களை, வாக்கியத்தை, பத்தியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள முனைவதும் முனைப்புக் காட்டுவதும் அதற்காக வழக்குப் போட்டு இழுத்தடிப்பு செய்ய நினைப்பதும் அண்மைக் காலத்தில் கல்வித்துறையில் பெருகி வருவது வேதனைக்குரியது. 

    உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியின் கதவைத் தட்டுவது தவறில்லை. பாதிப்புகளை வேண்டுமென்றே ஏற்படுத்தும் குறுகிய நோக்கில் தம் சொந்த விருப்பத்தை முன்னிறுத்தித் தொட்டவற்றுக்கெல்லாம் நீதிமன்றம் நோக்கி ஓடுவதென்பது ஆபத்தானது. நீண்ட நெடிய காலமாக, யாருக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத, அனைவரும் ஏற்கத்தக்க வகையில் கடைபிடித்து வரும் மாநில அரசின் கல்வித்துறை சார்ந்த பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கொள்கை முடிவுகளில் கடன் வாங்கி வந்து சம்மட்டி அடிக்க நினைப்பது என்பது நல்லதல்ல. இது பலவிதமான குழப்பங்களையும் குந்தகங்களையும் விளைவிக்க வல்லது.


    தற்போதைய புள்ளி விவரங்கள் அடிப்படையில் மேனிலைப்பள்ளிகளில் மட்டும் 680 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இஃது உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளிலும் நீடித்து வருகிறது. பணி ஓய்வு, பணி மாறுதல், பணியின் போது இறப்பு மற்றும் பணித் துறப்பு போன்றவை காரணமாக தலைமையாசிரியர் காலிப் பணியிடம் உருவாகிறது. இருவேறு தரப்பினரின் நீதிமன்ற வழக்குகளால் மட்டும் பல்வேறு மேனிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உரிய தலைமையாசிரியர் பதவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காலியாக உள்ளது. 

    இதனால் என்ன குடிமுழுகவா போகிறது என்றால் ஆம் என்பதே விடையாகும். பள்ளியும் கல்வியும் மாணவர்களின் ஒழுக்கமும் பாழ்பட்டுப் போகிறது! எந்தவொரு நிர்வாகமும் சிறக்க தலைமை அவசியம். பொதுவாகவே மனித மனம் ஒரு தலைமையின் சொல்படி இயங்குவதற்கு கீழ்ப்பட்டதாகவே உள்ளது. இதன் அடிப்படையில் தான் சாதியக் கட்டுமானங்களும் மத வழிபாட்டுச் சடங்கு முறைகளும் பொருளாதார செலவின வழிமுறைகளும் அரசியல் பிம்பக் கட்டமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து வருகின்றன. 


    நல்லவரோ கெட்டவரோ ஒரு தலைமை தமக்கு மேலாக இருக்க வேண்டும் அல்லது தாமே ஒரு தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒருவராக உருமாறி வழிநடத்த விழைவதும் அரங்கேறி வருகிறது.  இதில் குடும்பம் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை விதிவிலக்கல்ல. தம்மை ஏதேனும் ஒரு வழியில் வழிநடத்த ஒவ்வொருவருக்கும் ஒரு மீட்பரும் மேய்ப்பரும் தேவைப்படுகிறார். இதில் பள்ளி மாணவர்கள் தம் பதின்பருவ குழப்பமும் அச்சமும் நிறைந்த காலத்தில் ஒரு நல்ல தலைமையையும் சிறந்த வழிகாட்டியையும் தேடியலைவதும் ஏங்கித் தவிப்பதும் இயற்கை.

    இந்த பின்நவீனத்துவ சூழலில் தன்முனைப்பும் தற்சார்பும் மேலோங்க கீழ்ப்படிந்து நடக்கும் நோக்கும் போக்கும் அருகி வரும் நிலையில் பணியில் மூத்த பொறுப்புத் தலைமையாசிரியர் என்பவர் சக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடையே ஒரு எல்லைக்கு மேல் அதிகாரம் செலுத்தி நல்லதொரு நிர்வாகம் வழங்க முடியாத நிலை உள்ளது. அச்சாணி முறிந்த வண்டியாகத் தாறுமாறாக ஓடிச் சேர வேண்டிய நிலையில் இன்றைக்கு பல பள்ளிகளின் நடப்பு இருக்கிறது.

    இந்த இன்மைச் சூழல் பள்ளியின் தரம் மற்றும் நலத்தை வெகுவாக சீர்குலைத்து விடுகிறது. கற்பித்தலும் கற்றலும் ஆளுக்கொரு திசையில் பயணிக்கத் தொடங்கி மாணவரின் அடைவுத் திறன், தேர்ச்சி விகிதம், நல்லொழுக்கம், மாணவர் சேர்க்கை முதலானவற்றில் ஒரு பெரும் சரிவையும் சிக்கலையும் ஏற்படுத்த காரணமாக அமைகிறது என்பது மிகையாகாது. இதனால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை மற்றும் நன்மதிப்பு வெகுவாகக் குறையத் தொடங்குகிறது. இந்த கோவம் பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஆளும் அரசின் மீதும் திரும்பி வீண் கெட்ட பெயர் ஈட்டித் தந்து விடுவதை என்னவென்பது?

    அதுபோல், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் அகப்பட்டு பணியிடை நீக்கம் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் மாறுதல், பதிலி நியமனம் உள்ளிட்ட எந்தவொரு பணியும் மேற்கொள்ள இயலாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் கிடந்து வருவதும் கல்வியைத் தொடர்ந்து பாதித்து வருவதும் எளிதாகக் கடந்து விடமுடியாது. இத்தகைய ஆசிரியர் பெருமக்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் பிழைப்பூதியத்தைத் தம் அடிப்படை உரிமையெனக் கோரிப் பெற்று வாழ்ந்து விடுகின்றனர். தம் மீது சுமத்தப்பட்ட வழக்கையும் சட்டத்தின் துணைக்கொண்டு வேண்டுமென்றே காலம் கடத்துவதைக் காலப்போக்கில் தம் கடமையாகக் கருதுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது அறியத்தக்கது. ஏனெனில், கரும்புத் தின்னக் கூலி கொடுத்தால் யாருக்குத்தான் கசக்கும்?

    இக்காலக் கட்டத்தில் உண்மையாகவே மிகுந்த கற்றல் பாதிப்பையும் அதனால் விளையும் மதிப்பெண் குறைவுப் பேரிடரையும் எதிர்கொள்வது அனைத்தும் ஒன்றுமறியாத அப்பாவி மாணவர்கள் தாம். யார் யாரோ நிகழ்த்தும் பாவச் சுமைகளை அரசுப் பள்ளியைப் புகலிடமாக நம்பி வந்த ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மாணவர்கள்தாம் சுமக்க வேண்டியுள்ளது. இஃது ஆழ்கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கும் பனிக்கட்டி போல் உறைந்து வெளித் தெரியாமல் இருப்பது அனைவரும் உணரத்தக்கதாகும். 

    இதில் மற்றுமொரு கொடுமை யாதெனில், தாம் நிரபராதி என்று காலம் பல கடந்து மீளும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கக் காலம் உள்ளிட்ட அனைத்துப் பணிக்காலத்தையும் முறையான பணிக்காலமாக அறிவிக்கச் செய்து ஆணை பெற்று இடைப்பட்ட காலம் அனைத்திற்கும் விடுபட்ட ஒட்டுமொத்த ஊதியத்தையும் ஒரே தவணையாக இலட்சக்கணக்கில் வாங்கி விடுவர். இக்காலத்தில் கட்டாயம் செய்திருக்க வேண்டிய கற்பித்தல் பணிக்கும் அதனால் பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கும் அதனூடாக மாணவர்கள் தொடர்ச்சியாக அடைந்த துயரத்திற்கும் பெற்றோர்களின் மன வேதனைக்கும் பொறுப்பேற்பது யார்? இதற்கு இதுவரை மாற்று வழியில்லை. 

    ஏதோ ஒன்றைக் காரணம் காட்டி வழக்குகளைத் தேக்கி வைக்க இயலும். மாணவர்களை அவ்வாறு தக்க வைக்கத்தான் முடியுமா? இந்த மனித ஆக்கப் பேரிடருக்குப் பதில் சொல்ல வேண்டியது அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். தமக்குப் பாடம் கற்றுக் கொடுக்காத, வழக்குப் போடுவதையே வேலையாகக் கொண்ட, பள்ளிக்கே வாராமல் பிழைப்பூதியம் அல்லது மாத ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மீது மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் வழக்குப் போட்டால் நிலைமை என்னவாகும்? 

    முழுமையாகத் தம் தரப்பில் நியாயம் இருந்தபோதிலும், வழக்குகளால் கல்வி பாழாகுவதை ஒருபோதும் மனிதச் சமூகம் ஏற்க முடியாது. வாதி, பிரதிவாதிகளுக்கு இடையில் அகப்பட்டுச் சீரழிவதாகப் பள்ளிப் பிள்ளைகளின் எதிர்காலம் அமைவது சமுதாயத்திற்கு என்றும் நல்லதல்ல. இந்த குரலற்றவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டியது அவரச அவசியமாகும். ஏனெனில், கல்வி சார்ந்த வழக்கு மேல் வழக்குகள் இங்கே இமயமலை அளவில் பள்ளிக் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்கொண்டு மறைத்தவாறு குவிந்துக் கிடைக்கின்றன. 


    இத்தகையக் கல்வி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உடனடி நிரந்தர தீர்வுகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், கல்வித்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து அதன் தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கல்வி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குறைதீர் ஆணையம் (Educational Management and Disciplinary Grievances Authority) ஒன்றை விரைந்து உருவாக்கி, தக்க வழிகாட்டு நெறிமுறைகள் ஒருமித்து வகுப்பது இன்றியமையாதது. 

    இதன் மூலம் தேவையற்ற கால விரயத்தை நிச்சயமாகத் தவிர்க்க இயலும். குறைந்த கால அளவுகளை அளவுகோலாகக் கொண்டு விரைந்து ஆசிரியர் குறைதீர் நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் இதனால் விளையும் என்பது திண்ணம். நீதியும் நியாயமும் காலத்தில் நிலைநாட்டப்படும் என்பதால் அடிப்படை ஆதாரமற்றவற்றை வழக்குகளாக ஆக்கும் முயற்சிகள் இதனால் பெருமளவு குறையும். கல்வியும் புரையோடி நாள்பட்டுப் பாழ்பட்டு அழிவதும் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு மாணவர் நலம் காக்கப்படும் என்பது அசைக்க முடியாத உண்மையாகும்.

    -எழுத்தாளர் மணி கணேசன்

    Share:

    இந்திய அஞ்சல் துறையில் 12828 GDS., காலிப்பணியிடங்கள்!

    இந்திய அஞ்சல் துறை - ல் Gramin Dak Sevak (BPM/ABPM) காலிப்பணியிடங்கள்

    இந்திய அஞ்சல் துறை Recruitment 2023 - Apply here for Gramin Dak Sevak (BPM/ABPM) Posts - 12828 Vacancies - Last Date - 11.06.2023

    இந்திய அஞ்சல் துறை .லிருந்து காலியாக உள்ள Gramin Dak Sevak (BPM/ABPM) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.06.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்

    இந்திய அஞ்சல் துறை

    பணியின் பெயர்

    Gramin Dak Sevak (BPM/ABPM)

    மொத்த பணியிடங்கள்: 

    12828

    தகுதி

    இந்திய அஞ்சல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து 10வது முடித்திருக்க வேண்டும்.

    ஊதியம்: 

    Gramin Dak Sevak (Branch Postmaster) – ரூ. 12,000 – 29,380/-
    Gramin Dak Sevak (Assistant Branch Postmaster) – ரூ. 10,000 – 24,470/-

    வயது வரம்பு: 

    இந்திய தபால் அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 11-ஜூன்-2023 அன்று குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.

    வயது தளர்வு:

    OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
    SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்

    PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்

    PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்

    PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்

    தேர்வு செயல்முறை

    1. Merit list

    2. Certificate Verification

    விண்ணப்பக் கட்டணம்:

    மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும்: ரூ.100/-

    பெண்/SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் கிடையாது

    பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

    விண்ணப்பிக்கும் முறை: 

    அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 22.05.2023 முதல் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.2023

    Notification for இந்திய அஞ்சல் துறை 2022: Download Here

    Apply: Apply Now

    Vacancy Notice: Download Here

    Share:

    அரசு பள்ளியில் சேர 80,000 விண்ணப்பம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தகவல்!


    அரசு பள்ளியில் சேர 80,000 விண்ணப்பம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தகவல்

    ''நடப்பாண்டில், 80 ஆயிரம் மாணவர்கள் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

    நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே லாரன்ஸ் பள்ளியில், 'புதியன விரும்பு- - 2023' என்ற தலைப்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான, 5 நாள் பயிற்சி முகாமை அமைச்சர் மகேஷ் பறை அடித்து துவக்கி வைத்தார்.

    பின், அமைச்சர் கூறியதாவது:

    மாநிலத்தில் தொடக்க பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, 185 ஊராட்சிகளில் ஒவ்வொரு பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் பணி நடந்து வருகிறது.

    உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 'நபார்டு' நிதியின் கீழ் பள்ளி கட்டடங்கள் நவீன மயமாக்கப்படுகிறது.

    குறிப்பாக, பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


    நடப்பாண்டு, 80 ஆயிரம் மாணவ - மாணவியர் புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க விண்ணப்பம் பெற்றுள்ளனர்.

    'புதியன விரும்பு- 2023' என்ற தலைப்பிலான பயிற்சியில் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக, கலை, இலக்கியம், சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட, 15 வகையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சிகளை இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும், இலக்கிய ஆளுமை வாதிகளை கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

    கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை.

    திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். தமிழக முதல்வர், அதில் ஏதும் மாற்றம் அறிவித்தால், கடைபிடிக்கப்படும்.

    இவ்வாறு, அமைச்சர் கூறினார்.

    பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலர் காகர்லா உஷா, மாநில மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், கலெக்டர் அம்ரித் உட்பட பலர் பங்கேற்றனர்.


    Share:

    சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!


    சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து அரசாணை வெளியீடு!

    G.O.Ms.No.195 - Minister Incharge - Download here


    Share:

    ITI-யில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்!


    தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2023-2024-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை பதிவு துவங்க உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 24.05.2023 முதல் 07.06.2023 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 147 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

    மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைகான விண்ணப்பித்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் onlineitiadmission@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் 9499055612 அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share:

    பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: அரசுக்கு ராமதாசு வலியுறுத்தல்!


    வெயிலின் கொடுமையில் இருந்து மாணவர்களைக் காக்க தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளது என்னவென்றால், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று 'பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி' அறிவித்திருக்கிறார். கோடை வெப்பம் மக்களை வாட்டி வரும் நிலையில் ஜுன் 1ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன.


     தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்?மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு 50 நாட்கள் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, ஜுன் 2ஆவது வாரத்திற்குப் பிறகு தான் அப்பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

    இந்நிலையில் தமிழக அரசுப் பள்ளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே விடுமுறை அளித்து ஜுன் முதல் நாளிலேயே திறப்பது நியாயமற்றது. மாணவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் பள்ளிகள் திறப்பை தீர்மானிக்க வேண்டும்.கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்" 

    இவ்வாறாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


    Share:

    பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - இணைச் செயல்முறைகள் !


    பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் -  அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்


    இணைப்பு: அரசாணை மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல்.


    CoSE & DEE Co-Proceedings.pdf - Download here


    Share:

    புதியன விரும்பு 2023 - அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு!

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை முகாம் - புதியன விரும்பு 2023 - உதக மண்டலத்தில் நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செய்திக் குறிப்பு!





    Share:

    Blog Archive

    Definition List

    header ads

    Unordered List

    Support