12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணை தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில், மார்ச் / ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற  12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதமாகும். சரியாக, 47,934 மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை.

எனவே, நடந்து முடிந்த பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு வரும் ஜூன் 19ம் தேதி  உடனடி  சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்த துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல், இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலே உயர்கல்வியைத் தொடர முடியும்.

இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு (Govt Examination Service centre) சென்று ஆன்லைன் மூலம் பதிவேற்ற வேண்டும். இந்த சிறப்பு துணைத் தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த தேர்வுக் கால அட்டவணை, விண்ணப்பம் செய்வதற்கான உரிய நாட்கள் முதலான விவரங்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விரைவில்   வெளியிடப்படும். பெற்றோர் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது இந்த இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...