தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக பள்ளிகள் திறப்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இன்னொரு பக்கம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கிட்டத்தட்ட இலவச பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் புத்தகங்களை பாடம் வாரியாக தரம் பிரித்து சரிபார்த்து வருகின்றனர். மேலும் பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அனைத்து மாணவர்களும் அரசு புத்தகங்கள் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளி கல்வித்துறையும் அனைத்து மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிகள் திறந்த ஓரிரு நாட்களிலேயே புத்தகம் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.