கல்லுாரி ஆசிரியர்கள், 2016ம் ஆண்டுக்கு பின், பணி நியமனம் செய்யப்பட்டு, பிஎச்.டி., முடித்திருந்தால், அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படாது என, கல்லுாரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரி முதல்வர்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் கீதா அனுப்பிய சுற்றறிக்கை:
அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், எம்.பில்., -- பிஎச்.டி., முடித்தவர்களுக்கு, ஊக்க ஊதியம் கேட்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற நடைமுறையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, அழகப்பா பல்கலை, பெரியார் பல்கலை மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலையில், 2016ம் ஆண்டு அல்லது அதற்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், 2016க்கு பின், எம்.பில்., - பிஎச்.டி., பட்டம் பெற்றால், அதற்கு ஊக்க ஊதியம் பெற முடியாது என, அரசு தெரிவித்துள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.