நீட் 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழ்நாடு மாணவர் முதலிடம்! யார் தெரியுமா?


நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி 499 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.நீட் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 78,693 மாணவர்கள் நீட் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன், ஆந்திராவை சேர்ந்த போரா வருண் சக்ரவர்த்தி இருவரும் 99.9% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் பத்து இடங்களில் நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்பவர் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 4 பேர் தமிழர்கள் ஆவர்.

நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதினர். இதில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...