1 லட்சம் மாணவிகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு..!!

 1 லட்சம் மாணவிகள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு..!!



பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நோக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சகமும், மத்திய கல்வி அமைச்சகமும் இணைந்து கன்யா ஷிக்‌ஷா பிரவேஷ் உத்சவ் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.

11-14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தி இருந்தால், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்களிடம் எடுத்துரைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நீட்சியாக கடந்த ஆண்டு ஜூலை முதல் இப்போது வரையில் 1 லட்சம் மாணவிகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments