இலவச எலக்ட்ரிக்கல் வயரிங் பயிற்சி...!

 இலவச எலக்ட்ரிக்கல் வயரிங் பயிற்சி...!

கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சாா்பில் இலவச எலக்ட்ரிக்கல் வயரிங் பயிற்சிக்கான நோகாணல் வரும் புதன்கிழமை (நவம்பா் 15) நடைபெறுகிறது.

இது குறித்து கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:


திருப்பூா் அனுப்பா்பாளையத்திலுள்ள கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான ஒரு மாத முழு நேர எலக்ட்ரிக்கல் வயரிங் பயிற்சி நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சிக்கான நோகாணல் வரும் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில், எழுத, தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா் – 641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94890-43923, 99525-18441,86105-33436 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments