ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நவ.18 குறைதீர் முகாம்!!

ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நவ.18 குறைதீர் முகாம்!!



சென்னையில் வரும் நவ.18 ஆம் தேதி உணவு வழங்கல் துறை சார்பில் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீர் முகாம்:

தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கார்டு தொடர்பாக ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் பொருட்கள் தொடர்பாக குறைகளை நிவர்த்தி செய்வதற்காக உணவு வழங்கல் துறை சார்பில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நவ.11 ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி குறைதீர் முகாம் நடத்தப்படாத நிலையில் நவ.18 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை மண்டல உதவி கமிஷனர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர் முகாம் நடத்தபட இருப்பதாக உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் கட்டாயமாக இந்த குறைதீர் முகாமில் கலந்துகொண்டு ரேஷன் தொடர்பான குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments