மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் -அமைச்சர் அன்பில் மகேஷ்..!

மழைக்கால விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் -அமைச்சர் அன்பில் மகேஷ்..!


கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பங்கேற்ற பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பருவ மழை தீவிரமடைந்து இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  அதேசமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம்.  அந்த வகையில் மழைக்காலம் முடிந்ததற்கு பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம்.

மேலும், அரசு சார்பில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படஉள்ளது.  அந்த வகையில் நீட் தேர்வு பயிற்சிக்கு 46,216 மாணவர்களும், ஜே.இ.இ பயிற்சிக்கு 29279 மாணவர்களும், 31,730 மாணவர்கள் இரண்டுக்கும் சேர்ந்து விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

மேலும் அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்.  மேலும் நீட், கிளாட் போன்ற தேர்வுகள் பொதுத்தேர்வு தேதிகளோடு வராத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று வகையான அட்டவணை தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...