தீபாவளி பலகாரங்களுக்கு மத்தியில் "ரோஜாப்பூ" 10 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்..!!

 தீபாவளி பலகாரங்களுக்கு மத்தியில் "ரோஜாப்பூ" 10 செகண்ட் தான் டைம்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்..!!

இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தீபாவளி பலகாரங்களை போல ஒரு ரோஜாப்பூவும் மறைந்து உள்ளது. அது எங்கு உள்ளது என்பதை 10 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால்


ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தற்போது இணையதளத்தில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன. ஒளியியல் மாயை என்று சொல்லும் இந்த படங்கள் பார்ப்பவர்களின் கண்களை குழப்பும். அதாவது எளிதாக சொல்வது என்றால் படத்தை மேலோட்டமாக பார்த்தால் இல்யூஷன் படங்களில் புதிருக்கான விடையை கண்டுபிடிக்க முடியாது. உன்னிப்பாக கவனித்தால் விடையை கண்டுபிடித்து விடலாம்.


ஆப்டிகல் இல்யூஷன் படங்களை அடிக்கடி பார்த்து விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு கவனிப்பு திறன் மேம்படுவதாக கூட சொல்கிறார்கள். சரி இங்கே விஷயத்திற்கு வரலாம்... இன்று நாம் பார்க்க இருக்கும் ஆப்டிக்கல் இல்யூஷன் படத்தில் ஒரு ரோஜாப்பூ மறைந்து இருக்கிறது. அதை கண்டுபிடிப்பதுதான் டாஸ்க்.. படத்தில் தீபாவளி பண்டிகையை ஒரு குடும்பம் உற்சாகமாக கொண்டாடி இருக்கிறது.


ஒரு அம்மா, அப்பா, இரண்டு பிள்ளைகள், பாட்டி என உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இந்த இமேஜில் விளக்குகளும் தீபாவளி பலகாரங்களும் தென்படுகிறதா உங்கள் கண்ணுக்கு... ஆம் என்றால் நீங்கள் அரை கிணறு தாண்டி விட்டீர்கள்.. விடையை எளிதாக கண்டுபிடித்து விடலாம்.. எதை கண்டுபிடிக்கனும் என்று நினைப்பது புரிகிறது. இந்த படத்தில் ஒரு ரோஜாப்பூவும் உள்ளது. ரோஜாப்பூவை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுவும் வெறும் 10 செகண்டில்.. என்ன ரெடியா.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3...........10 டைம் ஓவர்... உங்களில் பலரும் ரோஜாப்பூ படத்தில் எங்கு மறைந்து இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருப்பீர்கள். சரி கண்டுபிடிக்காதவர்கள்.. இங்கே ரோஜாப்பூவே இல்லையே ஏமாற்றிவிட்டார்களா என நினைக்க வேண்டாம்.. சில டிப்ஸ் தருகிறோம்...அதை வைத்து கண்டுபிடித்து விடலாம்..

தீபாவளி பலகாரங்கள் மற்றும் அதன் பக்கத்தில் இருக்கும் விளக்குகள், பூக்கள் பக்கத்தில் ரோஜாப்பூவை தேடிக்கொண்டு இருந்தால்.. தீபாவளி முடிந்தாலும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. ரோஜாப்பூவை படத்தில் உள்ள பெண் ஒருவரின் தலையில் உள்ளது. இனி படத்தை நன்கு உற்று பாருங்கள்... இப்போது பலரும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்...

இப்போதும் கண்டுபிடிக்கவில்லை என்றால்.. இன்னும் ஈசியான டிப்ஸ்... படத்தின் இடது பக்கத்தில்தான் ரோஜாப்பூ உள்ளது. அட இன்னமும் கண்ணுக்கு சிக்க மாட்டைக்கிறது என நினைப்பவரா நீங்கள்.. படத்தில் ரோஜாப்பூ எங்கே இருக்கிறது என்பதை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. அதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...