தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. பொங்கல் பரிசுடன் ரூ.2000 ரொக்கம் – அரசு ஆலோசனை!
பொங்கல் பரிசு
தமிழகத்தில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை தை முதல் நாள் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை மக்கள் கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான பொருள்களுடன் ரொக்கமும் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதால் அது குறித்த அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர இருக்கும் நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000க்கு பதிலாக ரூ.2000 வழங்கலாமா என அரசு பரிசீலித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.