தேர்வு ஒத்திவைத்த சென்னை பல்கலைக்கழகம்..!

 தேர்வு ஒத்திவைத்த சென்னை பல்கலைக்கழகம்..!


தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று டிசம்பர் 2ஆம் தேதி புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இதனிடையே, வட இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், டிசம்பர் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி குறிப்பிடாமல் தேர்வுகளை ஒத்திவைத்துள்ள சென்னை பல்கலைக்கழகம், மழை எச்சரிக்கை காரணமாக மாணவ, மாணவிகள் நலன் கருதி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments