ஆசிரியர் பணி தேர்வு ரத்து கோரி போராட்டம்..!!
ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை ரத்து செய்து, 'வெயிட்டேஜ்' முறையில் பணி நியமனம் வழங்க கோரி, பட்டதாரிகள் போராட்டம் அறிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியில், 2,582 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி, 7ல் இந்த தேர்வு நடத்தப்படும் என, கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், போட்டி தேர்வின்றி, ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும் என, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
இதை வலியுறுத்தி, 23ம் தேதி சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன், உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.