டிச. 31 இறுதிநாள்.. உடனே ஆதாரை இணையுங்கள் – இல்லையெனில் நோ ரேஷன்!

 டிச. 31 இறுதிநாள்.. உடனே ஆதாரை இணையுங்கள் – இல்லையெனில் நோ ரேஷன்!

பீகார் உணவுத்துறை ஆனது ரேஷன் கார்டு தாரர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனை மீறும் நபர்களுக்கு இனி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு:

மத்திய அரசு நாட்டின் அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்களின் ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பயனாளிகளின் கோரிக்கையை தொடர்ந்து இதற்கான கால அவகாசம் தற்போது டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே ஆதார் உடன் ரேஷன் கார்டு இணைக்க முடியும். இந்த வழிமுறையை முடிக்காத பட்சத்தில் 2024 ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு தாரர்களுக்கான ஸ்ரீ ரஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷன் கார்டு தாரர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் தங்களது ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments