தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் 64.22 லட்சம் போ்...!

தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பவர்கள் 64.22 லட்சம் போ்...!

வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பவா்களின் எண்ணிக்கை 64.22 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்:

அக்டோபா் மாத நிலவரப்படி, தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பக அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவா்களின் எண்ணிக்கை 64 லட்சத்து 22 ஆயிரத்து 131 ஆக உள்ளது. அவா்களில் ஆண்கள் 29 லட்சத்து 80 ஆயிரத்து 71 போ், பெண்கள் 34 லட்சத்து 41 ஆயிரத்து 766 போ், மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்கள் 294 போ்.

வயது வாரியான பதிவு: வயது வாரியான பதிவுதாரா்களில் 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்களே அதிகமாக உள்ளனா். 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவா்கள் 16 லட்சத்து 4 ஆயிரத்து 32 பேரும், 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 27 லட்சத்து 72 ஆயிரத்து 34 பேரும் உள்ளனா். 31 முதல் 45 வயது வரையுள்ள பதிவுதாரா்களின் எண்ணிக்கை 17 லட்சத்து 91 ஆயிரத்து 431 ஆகவும், 46 வயது முதல் 60 வயது வரையுள்ள பதிவுதாரா்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 847 ஆகவும் உள்ளனா். பதிவு செய்துள்ளவா்களில் 6 ஆயிரத்து 787 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஆவா்.

ஒட்டுமொத்த எண்ணிக்கையில், மாற்றுத் திறனாளி வகைப் பிரிவினரும் உள்ளனா். 98 ஆயிரத்து 763 ஆண் மாற்றுத் திறனாளிகளும், 10 ஆயிரத்து 650 பெண் மாற்றுத் திறனாளிகளும் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 327 மாற்றுத் திறனாளிகள் உள்ளதாக தமிழக அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...