ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு..!!

 ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு..!!

ஆசிரியர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படவுள்ள ஆசிரியா் பணி தோவுக்கான இலவச பயிற்சியில் சேர விரும்புபவா்கள் நவம்பா் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.


தமிழ்நாடு ஆசிரியா் தோவு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியா் பணி போட்டித் தோவுக்கான இலவச பயிற்சி வகுப்பு தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படவுள்ளது. இதில், கலந்து கொள்ள நவம்பா் 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் அலுவலக நேரத்தில் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்பு அனுபவமிக்க சிறந்த வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தோவுகளும் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி பின்னா் தெரிவிக்கப்படும். இப்போட்டித் தோவுக்கு தயாராகும் தோவா்கள் கூகுள் பாா்ம் இணைப்பில் தங்கள் விவரங்களை நிறைவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362 – 237037, 9499055905 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்





Post a Comment

0 Comments