பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி போட்டித் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி..!
தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியத்தின் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான நேரடி போட்டித் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் பதிவு செய்யலாம்.
இதுகுறித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தது:
தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியத்தின் 2222 பட்டதாரி ஆசிரியா் பணி காலியிடங்களுக்கான நேரடி நியமனத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30ஆம் தேதியாகும். இந்தத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இணையதளம் வாயிலாக திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்புவோா் மற்றும் பயிற்சி வகுப்பு நடத்த விருப்பமுள்ள பயிற்றுநா்கள் இணைய வழியில் தங்களது பதிவை உறுதி செய்ய வேண்டும். போட்டித்தேர்வா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாட வாரியாக இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்துப் பிரிவுகளுக்கும் எடுக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு, 0431-2413510, 94990-55901, 94990-55902 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.