11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு Hall ticket தேர்வர்கள் பதிவிறக்கலாம் !

11, 12 ம் வகுப்பு Hall ticket தேர்வர்கள் பதிவிறக்கலாம் ! 

நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 28.02.2023 அன்று பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in கொள்ளலாம். என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து

தனித்தேர்வர்கள், www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH/APRIL 2023 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை (TIME TABLE) www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

Share:

10th Tamil Padivam Niraputhal 10th Tamil படிவங்கள் நிரப்புதல்

10th Tamil Padivam Niraputhal
10th Tamil படிவங்கள் நிரப்புதல்
மேல்நிலை வகுப்பு - சேர்க்கை படிவம் நிரப்புதல்

  • 10th Tamil padivam – படிவம் நிரப்புதல் - Download Now

  • மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பம் - Download Now
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவம் Download Now
  • நூலக உறுப்பினர் படிவம் Download Now



தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுபபினர்
 சேர்க்கை விண்ணப்பம் படிவம்
பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் நிரம்புதல்
10th Tamil நூலக உறுப்பினர் படிவம்



நூலக உறுப்பினர் படிவம்


திண்டுக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை /ஊர்ப்புற நூலகம் கிளை

உறுப்பினர் சேர்க்கை அட்டை

அட்டை எண் : 12345

உறுப்பினர் எண்: 200

பெயர் -                : கயல்விழி

தந்தை பெயர்.   : பாரதியார்

பிறந்த தேதி.      : 01.01.2005

வயது.                   : 15

படிப்பு.                   : பத்தாம் வகுப்பு

தொலைபேசி எண் : 0987654321

அஞ்சல் முகவரி -   : 10/4, பாரதி தெரு,
                                        பஞ்சபட்டி,
                                        திண்டுக்கல்,
                                         624200

(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)


நான் கிளை நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ 100 சந்தா தொகை ரூ  200 ஆக மொத்தம் ரூ 300 ரொக்கமாகச் செலுத்துகிறேன்.நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

இடம்

நாள்

தங்கள் உண்மையுள்ள



கயல்வுழி,
திரு /திருமதி/செல்வி/செல்வன் கயல்விழி  அவர்களை எனக்கு நன்கு தெரியும் என சான்று அளிக்கிறேன்



பிணைப்பாளர் கையொப்பம்
பா.சிவசாமி

(பதவி மற்றும் அலுவலகம்)

(மாநில / மைய அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகராட்சி/மாநகராட்சி ஒன்றிய பேரூராட்சி உறுப்பினர்கள்
Share:

9th Tamil 3rd Mid Term Question paper 2023

9th Tamil 3rd Mid Term Question paper 2023

9th Tamil

Share:

10th Tamil Second Revision Question paper 2023 - Dindigul District

10th Tamil Second Revision Question paper 2023 - Dindigul District

10th Tamil

10th Tamil Second Revision Question paper 2023 - Dindigul District - Download here

Share:

TET தேர்ச்சி மதிப்பெண்கள் 50% என்றால் சிறப்பு! - TET தேர்வுகள் எழுதியுள்ள தேர்வர்களின் கோரிக்கை?

நடந்து முடிந்த டிஇடி தேர்வுகள் பொதுவாகவே மிகவும் கடினத் தன்மையுடன் வினா அமைப்பு அமைக்க பெற்றிருந்தது நாம் அறிந்த ஒன்று. எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் படித்து தேர்வு எழுதி இருந்தாலும் , கேட்கப்பட்ட வினாக்கள் HOT என்ற உயர் சிந்தனை வினா அளவிலேயே இருந்தது . மேலும் கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் TET தேர்வுகளில் தேர்ச்சி பெற 82 என்ற மதிப்பெண்களை ( 55 % ) கொடுத்திருந்தனர். அப்போது TET தேர்வு மட்டுமே பணி நியமனத்திற்காக இருந்தது.   ஆனால் தற்போது பணி நியமனம் பெற இரண்டாவதாக மேலும் ஒரு நியமனத் தேர்வு எழுதிய ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால் TET தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் சதவீதம் 50 % ஆக இருந்தால் ( 75 மதிப்பெண்கள் ) சற்றே நிம்மதியுடன் , நம்பிக்கையுடன் அடுத்த தேர்வு எழுத தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தயாராக வாய்ப்பு உள்ளது . ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல அது ஒரு தகுதி தேர்வு மட்டுமே . அதாவது 75 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற அறிவிப்பை வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மான்புமிகு முதல்வர் முகஸ்டாலின் அவர்களுக்கு பணிந்து கோரிக்கை விடுக்கிறோம் - நன்றி .

Share:

11th Standard - Practical Model Question Papers 2023

11th Standard - Practical Model Question Papers 2023

11th Practical Model Question Papers 2023- English Medium
Subject Download
Physics  Download
Chemistry  Download
Bio-Botany  Download
Bio-Zoology  Download
Botany  Download
Zoology  Download
Computer Science  Download
Computer Application  Download
Geography  Download
Home Science  Download
Nursing Vocational  Download
Bio-Chemistry  Download
Microbiology  Download
Basic Electrical Engineering  Download
Basic Mechanical Engineering  Download
Basic Automobile Engineering  Download
Statistics  Download
Employment Skills  Download
Nutrition and Dietetics  Download

11th Standard - Practical Model Question Papers 2023 Tamil Medium's

11th Practical Model Question Papers 2023- Tamil Medium
Subject Download
Physics  Download
Chemistry  Download
Bio-Botany  Download
Bio-Zoology  Download
Botany  Download
Zoology  Download
Computer Science  Download
Computer Application  Download
Geography  Download
Home Science  Download
Nursing Vocational  Download
Bio-Chemistry  Download
Microbiology  Download
Basic Electrical Engineering  Download
Basic Mechanical Engineering  Download
Basic Automobile Engineering  Download
Statistics  Download
Employment Skills  Download
Nutrition and Dietetics  Download
Share:

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு - முக்கியமான தகவல்!

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு - முக்கியமான தகவல்!

தமிழக பள்ளிகளில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த தேதிகள் வெளியான நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

முழு ஆண்டு தேர்வு

தமிழக பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அதன் படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி எப்போது:

மேலும் 1முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது என்பது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதன் படி இந்த மாணவர்களுக்கு வழக்கம் போல ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், மே மாதத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் முழு ஆண்டு தேர்வுக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் செய்து வருவதாகவும், தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் விரைவில் வெளியிடும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

Share:

10th std - 3rd Revision Question Paper 2023

10th std - 3rd Revision Question Paper 2023

10th Tamil

10th Tamil - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - Download Here

10th English

10th English - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - Download Here

10th Maths

10th maths - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - Tamil Medium Download Here ( coming soon )

10th maths - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - English Medium Download Here ( coming soon )

10th science

10th science - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - Tamil Medium Download Here

10th science - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - English Medium Download Here

10th social Science

10th social science - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - Tamil Medium Download Here

10th social science - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - English Medium Download Here

Share:

10th social Science - 3rd Revision Question Paper 2023

10th social Science - 3rd Revision Question Paper 2023

10th social science

10th social science - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  -Tamil medium  Download Here

10th social science - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  -English medium  Download here ( coming soon )

Other subjects PDF Go to download link

10th all subjects - 3rd  Revision Question Paper 2023 - Download Here

10th all subjects - public Exam model Question Paper 2023 - Download Here

Share:

10th Science - 3rd Revision Question Paper 2023

10th Science - 3rd Revision Question Paper 2023

10th science

10th science - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  -Tamil medium  Download Here

10th science - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  -English medium  Download Here

Other subjects PDF Go to download link

10th all subjects - 3rd  Revision Question Paper 2023 - Download Here

10th all subjects - public Exam model Question Paper 2023 - Download Here

Share:

10th English - 3rd Revision Question Paper 2023

10th English - 3rd Revision Question Paper 2023

10th English

10th English - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - Download Here

Other subjects PDF Go to download link

10th all subjects - 3rd  Revision Question Paper 2023 - Download Here

10th all subjects - public Exam model Question Paper 2023 - Download Here

Share:

10th Tamil - 3rd Revision Question Paper 2023

10th Tamil - 3rd Revision Question Paper 2023

10th Tamil

10th Tamil - 3rd Revision Question Paper 2023 ( Mayiladuthurai)  - Download Here

Other subjects PDF Go to download link

10th all subjects - 3rd  Revision Question Paper 2023 - Download Here

10th all subjects - public Exam model Question Paper 2023 - Download Here

Share:

10ஆம் வகுப்பு - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு  - பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் மற்றும் சில அறிவுரைகள் - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

SSLC APRIL 2023 PRACTICAL EXAMINATION SCHEDULE For Regular Candidates

10th science Practical Exam 2023 Schedule & Instructions - Download here...

Share:

IT முறைகேடு - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சஸ்பெண்ட்!

IT முறைகேடு - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சஸ்பெண்ட்!

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த கீழாம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன். இவருக்கு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.

இப்படியான ஒரு விருதை பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன் மீது வருமான வரி தாக்கல் செய்ததில் திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, 120 (B) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், கடந்த ஒரு மாதமாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவர் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால், நேற்று அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், ராமச்சந்திரனை மதுரை அழைத்துச் சென்ற  சிபிஐ அதிகாரிகள், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உள்ளனர். 

இந்நிலையில், ஆசிரியர் ராமச்சந்திரனை, சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அவருக்கு வழங்கப்பட்ட விருதை திரும்ப பெறவும் பரிந்துரை செய்து உள்ளார்

Share:

NMMS MAT - Original Question Paper with Answer Key 2023

NMMS MAT - Original Question Paper with Answer Key 2023

NMMS - MAT Original Question Paper And Answer Key 2023.  NMMS MAT, SAT 2023  key answers with original question paper   Download here

Share:

1,2,&3 ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கான CRC கூட்டம்- SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

1,2,&3 ஆம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கான CRC கூட்டம்- SCERT இயக்குநரின் செயல்முறைகள்!




Share:

04.03.2023-சனி.அன்றைய தினம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலைநாளாக செயல்படும்? - மண்டல ஆய்வு!

04.03.2023-சனி.அன்றைய தினம் 6 மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலைநாளாக செயல்படும்?  - மண்டல ஆய்வு!

04.03.2023-சனி.அன்றைய தினம் மதுரை இராமநாதபுரம் திண்டுக்கல் தேனி சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு முழு வேலைநாளாக செயல்படும்.

பள்ளிகளை பார்வையிடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு

👇👇👇👇👇👇👇👇👇

Click here to download proceedings

Share:

பிப்-25 ஆம் தேதி தான் கடைசி நாள்!! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது ‌.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2021இல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விற்கு உரிய தாள் 2க்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரியத் தற்காலிக உத்தேச வினைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதியவர்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Quotion Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் இன்று முதல் 25-ம் தேதி மாலை 5.30 மணி வரையில் மட்டும் ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்

Share:

இளந்தமிழே - 12th Tamil Ilamtamile

இளந்தமிழே! 

- சிற்பி பாலசுப்பிரமணியம்

 நுழையும் முன்:

தமிழ்மொழி நம் அடையாளம்; பண்பாட்டின் நீட்சி; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்பட்டு, எழுதப்பட்டு உயிர்ப்போ டும் இளமையோடும் இருப்பது. 

இன்றும் தமிழ்மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. 

அத்தகைய தமிழின் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இலர் எனலாம். தமிழ் பல புதிய உள்ளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவிஞர்களின் அவா.

பாடல்:

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!

தம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்

தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்

விம்மு கின்ற தோள்மீதில் முத்துமுத்தாய்

வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட

எம்மருமைச் செந்தமிழே! உன்னை யல்லால்

ஏற்றதுணை வேறுண்டோ? இயம்பி டாயே!

மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்

முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள்

பாண்டியரின் சங்கத்தில் கொலுவி ருந்தாய்!

 பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்!

மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு

 மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!

கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்

குளிர்பொதிகைத் தென்தமிழே! சீறி வா, வா!

இலக்கணக் குறிப்பு

செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி -பண்புத்தொகைகள்

சிவந்து – வினையெச்சம்

வியர்வைவெள்ளம் – உருவகம்

முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்

உறுப்பிலக்கணம்

சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆன்

  • சா ய் – ப குதி, ப் – சந் தி ,
  • ப் – எதிர்கால இடைநிலை, 
  • ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.

விம்முகின்ற = விம்மு + கின்று + அ

  • விம்மு – ப குதி, 
  • கி ன் று – நிகழ் கால இடைநிலை ,
  • அ – பெயரெச்ச விகுதி.

வியந்து = விய + த் (ந்) + த் + உ

  • விய – பகுதி, 
  • த் – சந்தி (ந்ஆனது விகார ம்),
  • த் – இறந்த கா ல இ டை நி லை , 
  • உ – வினையெச்சசெந்தமிழே.

இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆ ய்

  • இரு – ப குதி, த் – சந் தி
  • ( ந் ஆ ன து வி கார ம்),
  • த் – இறந்தகால இடைநிலை,
  • ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.

புணர்ச்சி விதி

செம்பரிதி = செம்மை + பரிதி

விதி : ஈறு போதல் – செம் + பரிதி – செம்பரிதி.

வானமெல்லாம் = வானம் + எல்லாம்

விதி : உ டல்மேல் உயிர்வந்து ஒ ன் று வ து 

இயல்பே – வானமெல்லா ம்.

உன்னையல்லால் = உன்னை + அல்லால்

  • விதி : இஈஐ வழி யவ்வும் – உன்னை + ய் + 
  • அல்லால்
  • விதி : உ டல்மேல் உயிர்வந்து ஒ ன் று வ து 
  • இயல்பே – உன்னையல்லால்.

செந்தமிழே = செம்மை + தமிழே

  • விதி : ஈறு போத ல் – செம் + தமிழே
  • விதி : முன்னின்ற மெய் திரிதல் - செந்தமிழே

நூல்வெளி

  • இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. 
  • கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்; 
  • பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்;
  • மொழிபெயர்ப்புக்காகவும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். 
  • இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி,இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
  • இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்; 
  • இலக்கியச் சிந்தனைகள், மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்; 
  • மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; 
  • சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

Share:

12ஆம் வகுப்பு மாணவர்களை அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் செயல்பாடுகள் (Exposure Visit) - 27.02.2023 அன்று அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லுதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டுதல் சார்ந்து அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளுக்கு ( Exposure Visit ) மாணவர்களை அழைத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது , இது சார்ந்து , 20.02.2023 அன்று முதன்மை செயலாளர் பள்ளிக் கல்வித் துறை தலைமையில் நடந்த இணையவழி கூட்டத்தில் தெரிவித்தப்படி , கீழக்கானும் வழிமுறைகளை பின்பற்ற பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Students Exposure Visit to Govt Colleges - Download here...

Share:

இப்படி ஒரு சிறு சேமிப்பு திட்டமா ?? அதிக வட்டி கொடுக்கும் பெண்களுக்கான சூப்பர் திட்டம் !

 பெண்களுக்கான திட்டம் - அதிக வட்டி பணத்தை அள்ளித்தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்!

பெண்கள் தங்களுக்காக அல்லது தங்களது மகளுக்காக ஒரு தொகையை சிறுசேமிப்பு மூலம் சேர்த்து வைத்தால் அது பின் நாட்களில் பேருதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில ... பிறந்த குழந்தை முதல் 10 வயது வரையுள்ள பெண் குழந்தைகளுக்கு 1.5 லட்சம் வரை சேமிக்கும் செல்வமகள் திட்டம் ஏற்கனவே உள்ளது. அதன் முதிர்ச்சி என்பது 21 ஆண்டுகள் எடுக்கும். 

எனினும், 18 வயதிற்கு பின் பாதி அளவு தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. அதேபோல 15 ஆண்டுகளில் முதலீட்டின் இரட்டிப்பு தொகையை வழங்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமும் 0-10 இடைப்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு இருக்கிறது. ஆனால் இவை எல்லாமே நீண்டகால சேமிப்பு திட்டங்கள். குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக தான் இந்த பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்ற பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். அதன் முழு விபரங்கள் இதோ:

இந்த திட்டத்தின் மொத்த சேமிப்புத் தொகை எவ்வளவு?

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் மட்டுமல்லாது பெண்கள் தங்கள் பேரில் கூட அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என்று பட்ஜெட் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டத்தின் வட்டி விகிதம் எவ்வளவு?

மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் 7.5 சதவீத நிலையான வட்டி விகிதத்தை வழங்கும். இது பெரும்பாலான வங்கி வைப்புத் தொகை மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி போன்ற பிற பிரபலமான முதலீட்டுத் திட்டங்களை விட அதிகமாகும். மேலும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY). ஆகிவற்றின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் முதிர்வு தேதி எப்போது வரும்?

இதற்கு முன்னர் இருக்கும் நீண்ட கால சிறுசேமிப்பு போல இல்லாமல் மிகக்குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையை சேமிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள். எனவே இதற்கான முதிர்வு காலம் 2 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரத்தின் கீழ் புதிய சிறுசேமிப்பு வசதி 2023 மற்றும் 2025 க்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்களுக்கு வரிச் சலுகைகள் உண்டா ?

கண்டிப்பாக உண்டு. வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), மூத்த குடிமக்கள் சிறுசேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற சேமிப்புகளை எப்படி பிரிவு 80C யின் கீழ் காட்டி குறிப்பிடத்தக்க வரிச் சலுகை பெருகிறோமோ அதே போல மகிளா சம்மான் சேமிப்பு தொகையையும் வரி சலுகைக்கு காட்டலாம்.

சேமிப்பு தொகையை இடையில் திரும்பப் பெறுவதற்கான வரம்பு என்ன?

ஒரு சில நேரத்தில் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அவசரமாக பணம் தேவைப்படும். அப்படி சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை முதிர்ச்சி காலத்திற்கு முன் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த சேமிப்பு தொகையில் பகுதியளவு தொகையை திரும்பப் பெறும் வசதியை இந்திய அரசு அனுமதித்துள்ளது.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டக் கணக்கை எங்கே, எப்படி திறப்பது?

இத்திட்டத்தின் விவரங்கள் அரசால் இன்னும் முழுமையாக பகிரப்படவில்லை. இருப்பினும், இந்த திட்டத்தை ஏப்ரல் 1, 2023 முதல் எந்த அரசுக்கு சொந்தமான வங்கிகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் திறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share:

10th standard இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்தல் , வழுவமைதி வகைகள்

 

10th standard

பத்தாம் வகுப்பு - இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்தல் , வழுவமைதி வகைகள் 

10th standard one word questions

2 Mark Questions  :

  2  மதிப்பெண் வினாக்கள்  :                                                

1 .இரு சொற்களையும்  ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

         இயல் - 3                               ப .எண் : 68

1.  சிலை -  சீலை

சிலையைத்  திரைச்சீலையால்  மறைத்திருக்கிறார்கள் .

2. தொடு -   தோடு

தொடு உணர்வின்  மூலம்  தோடு காதில் உள்ளதை  தெரிந்துகொள்ளலாம் .                                              (அல்லது)

தாய் தன் குழந்தையின் காதைத் தொடுவதன் மூலம்   தோடு  அணிவித்தாள் .

3. மடு -  மாடு

கிணற்றில்  இருந்து  இறைக்கும் தண்ணீர்  மடு வழியாக  வாய்க்காலுக்கு சென்றதால்  மாடு தண்ணீர்  குடித்தது .  

                                                 (அல்லது)

மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது ராமனின்  மாடு .

4. மலை - மாலை

மலையேறும் போது  மாலை நேரமாகிவிட்டது .        

                                                ( அல்லது)

மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை  நேரத்தில் சென்றேன் .

5. வளி - வாளி

  வளிமண்டல காற்று பெற  மரம் நட்டு  வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .

6. விடு - வீடு

இளம் வயதிலே தீய பழக்கங்களை விட்டு விடு ; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு .

இயல் - 4                                                       ப.எண் : 96

7. இயற்கை -  செயற்கை

பாதை தெரியாத இயற்கைக் காடுகளில்  பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன .

8. கொடு -  கோடு

ஆசிரியர் எழுதுகோலை  மாணவனிடம் கொடுத்து , கோடு வரையச்  சொன்னார் .

9.  கொள் -  கோள்

மனதிலே   நம்பிக்கை  வைத்துக் கொள் ;  கோள்களுக்கும் சென்று வருவாய் என தந்தை மகனுக்கு  தைரியம் ஊட்டினார் .

10 . சிறு -  சீறு

சிறுவயதில் வளர்த்த காளைக் கன்றுக்குட்டி பின்னாளில்  சீறிப்பாயும் காளையாக மாறி நின்றது  .

11 . தான் - தாம்

மாணவர்கள் தான் படித்தக் கருத்துகளைத்  தாமே எழுதிப் பார்த்து  மதிப்பீடு  செய்துகொண்டார்கள் .

12 . விதி -  வீதி

சாலை விதியை மதித்து , வீதியைக் கடந்து செல்வோம் .

2 .  இயல் - 2                  ப, எண் :46

 1.  மலர் உண்டு . பெயரும்  உண்டு . -  இரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக .

மலரும் மலருக்குப் பெரும் உண்டு .

2 . தொடரில்  பொருந்தாப் பொருள் தரும்  மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக .                                    ப, எண் :46

இலுப்பை பூக்கள் இனிமையானவை . கரடிகள் மறத்தின் மீதேறி  அவற்றைப் பரித்து  உண்ணும் .  பாதிரிப் பூ  குடிநீருக்குத்   தன் மணத்தை ஏற்றும் .

விடை  :

இலுப்பைப்  பூக்கள் இனிப்பானவை ,  கரடிகள்  மரத்தின் மீதேறி ,  அவற்றைப் பறித்து  உண்ணும் .  பாதிரிப் பூ   குடிநீருக்குத்  தன் மனத்தை ஏற்றும் . 


3 .  கற்பவை கற்றபின்             

ப, எண் : 92

கீழ்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை  இனங்கண்டு எழுதுக .

அ)  அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் .

விடை  :  கால வழுவமைதி

இத்தொடர்  ' நாளை விழாவிற்கு வருவார் '  என  என அமையவில்லை  என்றாலும்  பிழையாகக் கருதுவதில்லை . ஏனெனில்  அவரது வருகையின் உறுதி தன்மை நோக்கிக்  கால வழுவமைதியாக  ஏற்றுக் கொள்கிறோம் .

2 . அவனும் நீயும் அலுவலரைப்  பார்க்க ஆயத்தமாகுங்கள் .

இட வழுவமைதி

"நீயும் அவனும் " என தன்மை இடத்தை முதலில் கூறவில்லை என்றாலும் பிழையாகக் கருதாமல் இட வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

3 ." இந்தக் கண்ணன்   ஒன்றைச் செய்தான் என்றால் ,  அதை அனைவரும் ஏற்பர் "  என்று கூறினான் .

இட வழுவமைதி

இந்தக் கண்ணன்  என்பான்  தன்னைப்பற்றி  பிறரிடம் கூறும் போது  தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது   இட வழுவமைதி ஆகும் .

4. சிறிய வயதில் அந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் .

கால வழுவமைதி .

" இத்தொடரில்" சிறிய வயதில்   எள்பது இறந்தக்கால நிகழ்வாதலால்  " ஊஞ்சல் கட்டி விளையாடினோம் "  அமையாததால்  பிழையாகக் கருதவில்லை . ஏனெனில்  சிறுவயதில் ஊஞ்சல் கட்டி விளையாடியதின்   உறுதித்தன்மையை நோக்கி காலவழுவமைதி ஆக ஏற்றுக் கொள்கிறோம்

5 .  செல்வன் இளவேலன்  இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்திருக்கிறார் .

பால் வழுவமைதி.

இத்தொடரில் " சாதனை புரிந்திருக்கிறான் "  என அமையாமல் " சாதனை புரிந்திருக்கிறார் "  என பலர்பால் கூறப்பட்டுள்ளதால் இது பால் வழுவமைதியாகக்  கொள்ளப்பட்டது .

4 .அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக .

அ)  தந்தை , "  மகனே !  நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!"  என்று சொன்னார் .(  ஆண்பால்  பெயர்களைப் பெண்பாலாக  மாற்றித் தொடர் எழுதுக .)

  தாய் , "  மகளே நாளை  உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா !"  என்று  சொன்னாள் .

ஆ)  அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது . அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினர். (  வழுவை வழாநிலையாக மாற்று )

அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள் .  அக்கா புறப்படும்போது , அம்மா வழியனுப்பினார் .

இ) "  இதோ முடித்து விடுவேன் "  என்று  செயலை முடிக்கும் முன்பே கூறினார் .(  வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக )

"  இதோ ,  முடித்துவிட்டேன் "  என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார் .

ஈ)  அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை .(  படர்க்கையை முன்னிலையாக ,  முன்னிலையைத் தன்மையாக , தன்மையைப் படர்க்கையாக மாற்றுக ).

நீ  என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை .

உ)  குழந்தை அழுகிறான் ,  பார் . (  வழுவை வழாநிலையாக மாற்றுக . )

குழந்தை அழுகிறது பார் .






Share:

பத்தாம் வகுப்பு மொழித்திறன் பயிற்சி

10th standard பத்தாம் வகுப்பு - வட்டார வழக்குச் சொற்கள்,கூட்டப்பெயர்கள், எழுவாய் தொடர் , பெயரெச்சத் தொடர் - விளித்தொடர் , பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுதல்

வட்டார வழக்குச் சொற்கள்  

    இயல் - 3           ப.எண்  : 61

1. பாய்ச்சல் -  பாத்தி

2 . பதனம்  -  கவனமாக

3 . நீத்துப்பாகம் -  மேல் கஞ்சி

4.  கடிச்சு குடித்தல்  -  வாய் வைத்து குடித்தல்

5 . மகுளி -  சோற்றுக் கஞ்சி

6 . வரத்துக்காரன் -  புதியவன்

7 . சடைத்து புளித்து  -  சலிப்பு

8 . அலுக்கம் -  அழுத்தம் ( அணுக்கம் )

9 .தொலவட்டையில் -  தொலைவில்

கீழ்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக .   

         இயல் - 1          ப.எண்  : 21

1 .கல் -  குவியல்

2 .பழம் - குலை

3 .புல் - கட்டு

4 .ஆடு - மந்தை

5 . சாவி -  கொத்து

6 .எறும்பு - சாரை

7 .வீரர் - படை

8 .யானை - கூட்டம்

9 .மாமரம் - தோப்பு

10 .வாழைமரம் - தோட்டம்

11 .வாழைப்பழம் - தார்

வேர்ச்சொல்லைப் பயன்படுத்தி  எழுவாய்த் தொடர் , பெயரெச்சத் தொடர் ,   வினையெச்சத் தொடர், விளித்தொடர் ,  வேற்றுமைத் தொடர்  அமைக்க .

வேர்ச்சொல் :  ஓடு , சொல் ,  தா ,  பார் , வா . 

  இயல் - 5           ப.எண்  : 123

1 . ஓடு :

அ ) அருணா ஓடினாள் -  எழுவாய்த் தொடர்

ஆ)  ஓடிய அருணா -  பெயரெச்சத் தொடர்

இ)  ஓடிவந்தாள் -  வினையெச்சத் தொடர்

ஈ)  அருணா ஓடாதே ! -  விளித்தொடர்

உ)  அருணாவிற்காக ஓடினாள் --வேற்றுமைத் தொடர்

2 . சொல் :

அ)  அம்மா சொன்னார் -  எழுவாய்த் தொடர்

ஆ)  சொன்ன அம்மா -  பெயரெச்சத் தொடர்

இ)  சொல்லிச் சென்றார் -  வினையெச்சத் தொடர்

ஈ)  அம்மா சொல்லாதே -  விளித் தொடர்

உ)  கதையைச் சொன்னார் -  வேற்றுமைத் தொடர்

3 .தா :

அ)  அரசர் தந்தார் -  எழுவாய்த்  தொடர்

ஆ)  தங்க அரசர் -  பெயரெச்சத் தொடர்

இ) தந்து சென்றார் -  வினையெச்சத் தொடர்

ஈ)  அரசே தருக ! -  விளித் தொடர்

உ)  தருவற்காக அரசர் -  வேற்றுமைத் தொடர்

4 . பார் : 

அ) துளிர் பார்த்தாள் -  எழுவாய்த் தொடர்

ஆ)  பார்த்த துளிர் - பெயரெச்சத் தொடர்

இ) பார்த்து சிரித்தாள் -  வினையெச்சத் தொடர்

ஈ)  துளிரே பார் ! -  விளித் தொடர்

உ) துளிருடன் பார்த்தேன் -  வேற்றுமைத் தொடர்

5 . வா : 

அ) குழந்தை வந்தது -  எழுவாய்த் தொடர்

ஆ) வந்த குழந்தை -  பெயரெச்சத் தொடர்

இ)  வந்தது குழந்தை - வினையெச்சத் தொடர்

ஈ)  குழந்தையே வா ! -  விளித்தொடர்

உ) குழந்தைக்காக வந்தாள் -  வேற்றுமைத் தொடர்

பிறமொழிச் சொற்கள் :
பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக .

இயல் - 6       ப.எண்  : 150

1. கோல்டு பிஸ்கட் -  தங்கக் கட்டி

2. ஈக்வலாக -  சரிசமமாக

3 . வெயிட் -  எடை

4 . பட் - ஆனால்

5 . எக்ஸ்பெரிமெண்ட் -  பரிசோதனை

6. ரிப்பீட் -  மீண்டும்

7 .ஆன்சரை - விடையை

8 .ஆல் த பெஸ்ட் -  வாழ்த்துகள்

9 .தராசு - துலாக்கோல்

பின்வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக .

        இயல் 8                   ப.எண்  : 199

பேச்சு வழக்கு :

"  தம்பீ?   எங்க நிக்கிற ? "

"  நீங்க சொன்ன எடத்திலதாண்ணே !  எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது ."

"  அங்கனக்குள்ளேயே  டீ சாப்டுட்டு,  பேப்பரப்  படிச்சுக்கிட்டு இரு ... நா வெரசா  வந்துருவேன் "

" அண்ணே !  சம்முவத்தையும்  கூட்டிக்கிட்டு வாங்கண்ணே !  அவனெப் பாத்தே  ரொம்ப நாளாச்சு !"

"  அவம்பாட்டியோட  வெளியூர் போயிருக்கான் . உங்கூருக்கே  அவனெக்  கூட்டிக்கிட்டு  வர்றேன். "

"ரொம்பச் சின்ன வயசுல  பார்த்ததுண்ணே !  அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும் !"

" இப்போ ஒசரமா வளர்ந்துட்டான் !  ஒனக்கு அடையாளமே தெரியாது !  ஊருக்கு எங்கூட வருவாம்  பாரேன்! சரி ,  போனை வையி,   நாங் கெளம்பிட்டேன் "

"சரிங்கண்ணே  ".

எழுத்து வழக்கு :

"  தம்பி!  எங்கே நிற்கிறாய் ?"

" நீங்கள் நிற்கச் சொன்ன  இடத்தில்தான்  நிற்கிறேன் . எதிர்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது ."

     "  அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக் கொண்டு  இரு . நான் விரைவாக வந்து விடுவேன் ."

      " அண்ணா !  சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்  அண்ணா !  அவனைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. "

   " அவன் பாட்டியோடு  வெளியூர் போயிருக்கிறான் . உங்கள் ஊருக்கு அவனையும் அழைத்துக் கொண்டு வருகிறேன் ."

   " மிகச் சிறிய வயதில் பார்த்தது அண்ணா ! அப்பொழுது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ! "

   " இப்பொழுது உயரமாக வளர்ந்து விட்டான் . உனக்கு அடையாளமே தெரியாது ! ஊருக்கு எங்களுடன் வருவான்  பார் ! சரி, தொலைபேசியை வை, நான் புறப்பட்டு விட்டேன் ."

"  சரி அண்ணா "

சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள் தருக .

 இயல் 8             ப.எண்  : 200

1 . கானடை

அ)  கான் அடை  -  காட்டைச்  சேர்

ஆ) கால் நடை -  காட்டுக்கு நடத்தல்

இ) கால் நடை  -  காலால் நடத்தல்

2.  வருந்தாமரை

அ) வரும் தாமரை -  வருகின்ற தாமரை

ஆ)  வருந்தாமரை -  வருந்தாத மான்

இ)  வரும் தாமரை -  வரும் தாவுகின்ற மான்

3.  பிண்ணாக்கு

அ)  பிண்ணாக்கு -  எள் எடுத்த  சக்கை

ஆ)  பிள் நாக்கு -  பிளவுபட்ட நாக்கு

4.  பலகையொலி

அ)  பலகை  ஒலி -  பறவையின் சத்தம்

ஆ)  பல கை ஒலி -  பல கைகளின் சத்தம் எழுப்புவது



 

Share:

12ம் வகுப்பு பொதுத்தேர்வு Internal Mark – தேர்வுத்துறை முக்கிய அறிவுறுத்தல்!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு Internal Mark – தேர்வுத்துறை முக்கிய அறிவுறுத்தல்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வுத்துறை அறிக்கை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்வுக்கு முன்னதாக இம்மாதம் செய்முறை தேர்வுகள் துவங்க உள்ளது. இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும்படி தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில், அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் www.dge1.tn.gov.in என்ற அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்கு சென்று, USER ID மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவு செய்யலாம். இதற்கான காலக்கெடு 17.02.2023 முதல் 28.02.2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பிப்ரவரி 28 வரை தலைமையாசிரியர்கள் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, மார்ச் 2 ஆம் தேதிக்குள் அதனை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share:

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – பதிவிறக்கம் செய்வதற்கான Simple Steps இதோ!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – பதிவிறக்கம் செய்வதற்கான Simple Steps இதோ!

தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த பொதுத் தேர்வுக்கான Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு

தமிழகத்தில் நடப்பு (2022-23) கல்வியாண்டுக்கான 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரையும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், இதே போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு www.dge.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த Hall Ticket-ல் மாணவர்களின் பெயர், தேர்வு அட்டவணை, பட்டியல் எண், தேர்வு எண் மற்றும் தேர்வு மைய முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

இதனை பெற விரும்பும் மாணவர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது மாணவர்கள் தங்களின் கல்வி நிறுவனத்தின் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

வழிமுறைகள்

1. இதற்கு முதலில் dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

2. இதன் முகப்புப் பக்கத்தில் ஹால் டிக்கெட்டுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்

3. இப்போது Regular Candidate / Private Candidates என்பதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து உங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்

5. இப்போது உங்களின் பொதுத்தேர்வுக்கான Hall Ticket திரையில் தோன்றும்.

6. இதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Download Hall Ticket

Official Site


Share:

10 ஆம் வகுப்பு கலைச்சொல் அறிவோம் | மொழித்திறன் பயிற்சி - வினாக்கள் -10th standard kalaichol arivom

 10th standard - -KALAICHOL ARIVOM - பத்தாம் வகுப்பு கலைச்சொல் அறிவோம் |   10 ஆம் வகுப்பு மொழித்திறன் பயிற்சி - வினாக்கள்

கலைச்சொல் அறிவோம் 

  இயல்  _1            ப.  எண் : 24

1. Vowel  _  உயிரெழுத்து

2 .Consonant _  மெய்யெழுத்து

3. Homograph _  ஒப்பெழுத்து

4. Monolingual _  ஒருமொழி

5. Conversation _  உரையாடல்

6.Discussion _    கலந்துரையாடல்

இயல் _2       ப.எண்  : 48

7.Storm _  புயல்

8. Tornado _   சூறாவளி

9. Tempest _  பெருங்காற்று

10. Land Breeze _  நிலக்காற்று

11. Sea Breeze _  கடற்காற்று

12. Whirlwind  _  சுழல் காற்று

இயல் _ 3      ப. எண் :  69

13 .Classical Literature  _  செவ்விலக்கியம்

14. Epic Literature  _  காப்பிய இலக்கியம்

15. Devotional literature  _  பக்தி இலக்கியம்

16.Ancient literature  _  பண்டைய இலக்கியம்

17. Regional  literature _   வட்டார இலக்கியம்

18 . Folk literature  _  நாட்டுப்புற இலக்கியம்

19 .Modern literature  _  நவீன இலக்கியம்

இயல் _4       ப.எண் : 97

20 . Nanotechnology  _  மீநுண் தொழில்நுட்பம்

21. Biotechnology  _  உயிரித் தொழில்நுட்பம்

22 .Ultraviolet Ray's _  புற ஊதாக் கதிர்கள்

23.Space Technology _   விண்வெளித் தொழில்நுட்பம்

24 .Cosmic rays _  விண்வெளிக் கதிர்கள்

25 .Infrared rays _  அகச்சிவப்புக் கதிர்கள்

இயல் _5    ப.எண் : 126

26 .Emblem _  சின்னம்

27 .Thesis _  ஆய்வேடு

28 .Intellectual _  அறிவாளர்

29 .Symbolism _  குறியீட்டியல்

இயல் _6      ப .எண் _153

30 .Aesthetics _  அழகியல் ,  முருகியல்

31 .Artifacts _  கலைப் படைப்புகள்

32 .Terminology _  கலைச்சொல்

33 .Myth _   தொன்மம்

இயல் _ 7      ப.எண் : 182

34 .Consulate _  துணைத் தூதரகம்

35 . Patent _  காப்புரிமை

36 . Document  _  ஆவணம்

37 . Guild _  வணிகக்குழு

38 .Irrigation   _ பாசனம்

39 .Territory _   நிலப்பகுதி

இயல் _ 8     ப. எண் : 200

40 .Belief _  நம்பிக்கை

41 .Renaissance _  மறுமலர்ச்சி

42 .Philosopher _  மெய்யியலாளர்

43 .Revivalism _  மீட்டுருவாக்கம்

இயல் _ 9     ப .எண் : 229

44 .Humanism _  மனிதநேயம்

45 .Cabinet _  அமைச்சரவை

46 .Cultural  Boundaries _  பண்பாட்டு எல்லை

47 .Cultural values _  பண்பாட்டு விழுமியங்கள்


Share:

பொதுத்தேர்வுப் பணி ஆசிரியர்கள் 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்தத் தடை!


தமிழகத்தில் பொதுத்தேர்வுப் பணிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: * சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை தேர்வு மையங்களில் பயன்படுத்தக் கூடாது. செல்போனை தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில் வைக்க வேண்டும்.

தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு மையத்தில் வாட்ஸ்ஆப்' மூலம் எந்த வித தகவல்களையும் பகிரக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வரும் மாா்ச் 13 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

இதையும் படிக்க: தமிழகத்தில் 40 இடங்களில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு! இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் கண்டறிதல், பெயா்ப் பட்டியல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்வுத் துறை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Share:

10ம் வகுப்பு - காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல்10th standard tamil poem writings

 10ம்  வகுப்பு - காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல் -10 

10th standard tamil poem writings

இயல் - 1  ப.எண் : 23

   கல்வி

மாணவப் பருவத்திலே

கல்வி என்னும்

அறிவுப்  பூட்டைத் திறந்திடு....

மதிப்பெண் பெற்றிடவே

பாடத்தைப் படித்திடு !

முயற்சியைத் தொடர்ந்து

மூளையிலே நிறுத்திடு !

சாவி கொண்டு பூட்டிடு !

எப்போதும் நினைத்து 

ஏகாந்தமாய் இருந்திடு !

கல்வி என்னும்

அறிவுக் கண்ணைத்

திறந்திடு ....


இயல் - 2        ப.எண்  : 47




சுத்தமான சுவாசம்

சுற்றுச்சூழல்  மாசுபாட்டால்

மனிதன் உயிர் வாழ

தூய காற்றைத் தேடி

அலைந்து ....

மண்பானையிலே

மரம் ஒன்றை வளர்த்து

காடு மேடெல்லாம்

அலைந்து ....

தூய்மையான காற்றைத்

தனக்கெனவே தனியாக

குழல் மூலம்  பெற்றே ....

நலமுடன் வாழும்

காலமும் வந்ததே.......


இயல்  - 3   ப. எண் : 68

      



  இரக்கம்

இயற்கை அழகு கொஞ்சும்

இன்பமான வீட்டிலே..

அன்பான உறவு சொல்லி

ஆசையோடு பரிவு காட்டி

பாசத்தோடு...

பசிக்குத் தட்டிலே

உணவிட்டு ....

நன்றியுள்ள  ஜீவனுக்கு

நன்றியோடு  ...

நல்வாழ்க்கை

வாழ்ந்திடுவோம் ....

இயல்  - 4  ப.எண் : 97

    



அலைபேசி

கைகளில் தவழும் 

குழந்தையே..

நீயின்றி நானில்லை !

உன் நினைவால்..

உறக்கமில்லை....

பெருமையாக நினைத்து

உன்னை மதித்தேன்  !  

அதனால்   நீ.....

என் முதுகின் மீது ஏற

எனக்கே பாரமாகி

கைகளிலே சாட்டையோடு..

என்னை அடிமையாக்கி

சவாரியும் செய்வதேனோ !


இயல்  - 5     ப.எண்  :125


மரம் வளர்ப்போம்

வெட்ட வெளியிலே 

மணற்பரப்பிலே ...

மேகக் கூட்டத்தோடு

மரம்  இன்றி..

நிழல் இன்றி.. அமர்ந்து

மரம் வளர்ப்போம்..

அரண் காப்போம்..

மழை பெறுவோம்.. 

என்று

பசுமையான படம் காட்டி

பகுத்தறிவூட்டி...

பூமித் தாயைக்  காத்திடுவோம்...

பொறுப்புடனே...

வாழ்ந்திடுவோம்....

இயல்  - 6        ப .எண் : 152



   ஒயிலாட்டம்

உருமி சத்தம் கேட்டதுமே

உரிமையோடு ஆடிடுவோம்...

இடுப்பிலே கச்சைக்கட்டி

கையிலே துணியை வீசி

ஒய்யாரமாய் ஆடிடுவோம்....

உடலிலே  வியர்வை சிந்த

காண்பவரைக் கவர்ந்திழுக்க..

கணக்காய்  அடியெடுத்து..

ஒற்றுமையாய் இணைந்திடுவோம்  !

ஓசைக்கு ஏற்ப ஆடிடுவோம் !

இயல் - 7    ப.எண் : 182


 


உழவன்

கலப்பையைத் தோளிலே

சுமந்து.....வேட்டியை

இடுப்பிலே  அணிந்து

மேகமூட்டத்துடன்..

காலையிலே  கழனி செல்லும்

உழவனே.....நீ

ஏர் பிடித்து உழவு செய்து..

நீரிறைத்துப் பயிர் வளர்த்து..

உணவுதானியங்களைக் குவித்தே..

உலகோர் அனைவருக்கும்

பசியினைப் போக்குவாயே...

உழுதுண்டு வாழ்வாரே

உலகின் உயர்ந்த மனிதன் !

இயல் - 8   ப.எண் : 201

      



தானம்


தானம் கொடுக்கும் 

பொருளைப்  பெறாதே !

கொடுக்க நினைக்கும் பொருளை

  ஏழைக்குக் கொடுத்துவிடு !

உழைத்துப் பொருளைச் சேர்த்து

வாழ்வதே பெரும் மகிழ்ச்சி !

கொடுப்பதைப் போல் கொடுத்து

ஏழையின் வயிற்றில் அடிக்காதே !

நீதி காக்கும் தெய்வம்

நித்தம் உன்னை வணங்கும் !

இயல்  - 9  ப . எண்  :  229


    தர்மம்

ஒருவருக்கு பெருமை.....

ஒருவருக்கு வறுமை    ...

இடது கையிலே உதவி...

வலது கையிலே அலைப்பேசி,.

வயிற்றுப்பசிக்கு கையேந்தி

வகையாய் புகைப்படங்கள்..

அலைபேசியின் ஆர்வத்தாலே..

மதிப்பற்றுப்   போனதே  ..

மானிட மனம்  !!



Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support