தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறைக்கு ஊதியம் இல்லையா?....


தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறனறிவு வகுப்புகளை , பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களை பணி நிரந்தரம் செய்வதாக தி.மு.க. தேர்தல் அறிக்கை 181-ல் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரை நடந்த 3 பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இது தொடர்பான அறிவிப்பு வெளிவராததால் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு பள்ளிகளுக்கு மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கவில்லை. இம்முறையில் இருந்தாவது வழங்க வேண்டும் என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

தொடர்ந்து பேசுகையில், 


12 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குடும்ப நலன் கருதி நிரந்தர ஆசிரியர்களை போல் மே மாத ஊதியம் வழங்க வேண்டும். மேலும் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி விடியல் தர வேண்டும்.

என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments