5-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு..!!

5-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு..!!

அரசுப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல்நிலை குறித்து அறிவதற்கான திறனாய்வுத் தேர்வு ஜூன் 21 முதல் 30-ம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: 

1 முதல் 3-ம்வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டம் வரும் கல்வியாண்டு (2023-24) முதல் 4, 5-ம் வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் 5-ம் வகுப்புமாணவர்களின் கற்றல் நிலைகுறித்து அறிய தமிழ், ஆங்கிலம்,கணிதம் ஆகிய பாடங்களில் அடிப்படை திறனாய்வுத் தேர்வு செயலி மூலம் ஜூன் 21 முதல் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்.

கால அட்டவணை: இதுதவிர 1 முதல் 5-ம்வகுப்புகளுக்கான வகுப்பறை கால அட்டவணை, வளரறி, தொகுத்தறி மதிப்பீட்டுக்கான கால அட்டவணை, 4, 5-ம் வகுப்புக்கான எண்ணும் எழுத்தும் திட்டம்சார்ந்த வகுப்பறை செயல்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து தொடர் நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். மேலும் எண்ணும் எழுத்தும் திட்டம் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...