TNSED SCHOOLS APP ல் ஆசிரியர்கள் தங்களது LEAVE APPLY செய்யும் முறை

TNSED SCHOOLS APP ல் ஆசிரியர்கள் தங்களது LEAVE APPLY செய்யும் முறை

TNSED SCHOOLS APP ல் ஆசிரியர்கள் தங்களது LEAVE APPLY செய்யும் முறை


Share:

அரசுப்பள்ளிகள் சந்தை மடங்களும் அல்ல!மாணவர்கள் சோதனைக்கூட எலிகளும் அல்லர்!

அரசுப்பள்ளிகள் சந்தை மடங்களும் அல்ல!மாணவர்கள் சோதனைக்கூட எலிகளும் அல்லர்!


அண்மையில் ஓர் ஆசிரியர் தன்னார்வலர் தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் குறைந்த மதிப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப் போவதாகவும் அதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட கூகுள் படிவத்தை நிரப்பி அனுப்பி வைத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்ட செய்தி பல்வேறு கல்வி சார்ந்த புலனக் குழுக்களில் (WhatsApp groups) பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் பல்வேறு அதிதன்னார்வ ஆசிரியர்கள் பலரும் விடுபட்டுள்ள எங்கள் மாவட்டம் மற்றும் எங்கள் பள்ளிக்கு 9 & 10 ஆம் வகுப்பு போதிக்க அரசு நியமிக்கவிருக்கும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னர் தனிநபர் முயற்சியில் தன்னார்வ தற்காலிக ஆசிரியர் நியமிக்கும் அறிவிப்பிற்கு முட்டிமோதிக் கொண்டிருக்கும் அவலநிலை சகிப்பதற்கில்லை. முதற்கட்டமாக மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முதல் முன்னுரிமை தனிநபர் அறிவிக்கையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற நபர்களின் இத்தகைய முயற்சிகள் நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படுமேயானால் எதிர்காலத்தில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களும் அதற்கான வேலைவாய்ப்புகளும் கேள்விக்கும் கேலிக்கும் உரியதாகி விடக்கூடும். பணம் படைத்தவர்கள் அல்லது கிடைப்பவர்கள் அரசுப் பள்ளிகளில் எதையும் சாதித்துக் கொள்ளலாம் அல்லது நிகழ்த்திக் கொள்ளலாம் என்ற மனநிலையில்  ஊடுருவல் மேற்கொள்வது அதிகரிக்க வாய்ப்புள்ளது. 


ஆண்டுதோறும் தமிழக நிதிநிலை அறிக்கையில் அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மற்றும் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கு இதுபோன்ற நடவடிக்கை முட்டுக்கட்டை போட முயற்சிக்காது என்பது கேள்விக்குறியே. மேலும், பல்வேறு உடல் மற்றும் உள சிக்கல்கள் நிறைந்த இன்றைய பதின்பருவ வயதினரைத் திறம்படக் கையாள்வதில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் பள்ளிக்கல்வித் துறையும் அதன்கீழ் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களும் விழிபிதுங்கிக் கிடக்கும் இச்சூழலில் இதுபோன்ற ஓரிரு மாதங்கள் மட்டுமே தன்னார்வ ஆசிரியப் பணியில் பணிபுரிவோர் நிலையை என்னவென்பது? 


இதுதவிர, தனிநபர் தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள் ஆகிய இருவரின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பேற்பது? இது ஏதோ ஒருவர் அல்லது இருவர் பிரச்சினை என்று புறந்தள்ள முடியாது. நியமனம் செய்யவிருக்கும் சுமார் 1500 நபர்கள் சார்ந்த அவர்களின்கீழ் கல்வி பயிலவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்ந்த கல்விச் சிக்கல்களையும் தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. 


குச்சியையும் சாக்கட்டியையும் கையில் எடுத்தவர்கள் எல்லாம் ஆசிரியராகி விட முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் அது வெகு இயல்பாக நடந்தேறி வருகிறது. இவர் பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். அவர் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி போதித்தார் என்று ஊடகங்கள் வழி நிறைய காட்சிகள் அரங்கேறி வருவது அறிந்ததே. அதேவேளையில் ஊடக கவனம் மற்றும் வெளிச்ச விரும்பிகள் தம் இருக்கையை ஒருநாள் விட்டுக் கொடுத்து பெருமிதப்படும் அலப்பறைகளும் கண்டு வாய்பிளந்த கொடுமைகளும் நிறைய உண்டு. போதிப்பதற்கும் கற்பிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்புத்தகத்தை எடுத்து வாசிப்பதும் விளக்குவதும் ஒருபோதும் நல்ல கற்பித்தல் ஆகாது. குழந்தை உளவியல் அடிப்படையில் நீடித்த நிலைத்த கற்றலைக் குழந்தைகள் அறியாமலேயே மெல்ல மெல்ல மலரச் செய்வதுதான் உண்மையான கற்பித்தல் ஆகும். போதனையில் இயல்புநிலை அகன்று இயந்திர நிலையே கோலோச்சும். தற்காலிக கற்றல் பாவனை தான் அதில் எஞ்சும்.


இதுநாள்வரை எந்த ஓர் ஆசிரியரும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், மருத்துவர், பொறியாளர், கல்வி மற்றும் வளர்ச்சி அலுவலராக அதிகாரத்தை ஒரு விநாடி கூட கையிலெடுத்தது இல்லை. அதேவேளையில், தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரராக ஆகிவிடுவது போன்ற கொடுமைகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நிகழ்த்திக் காட்டப்படுகிறது. எவராவது தனியார் பள்ளிகளில் ஒரு விநாடி ஆசிரியராக ஏன் ஒருபோதும் இருக்க முடிவதில்லை என்பது சிந்திக்கத்தக்கது. ஆளாளுக்கு அரங்கேற்றம் செய்ய அரசுப் பள்ளிகள் ஒன்றும் சந்தை மடங்கள் அல்ல. அதுபோல், ஏழை, எளிய, அடித்தட்டு, பாமர மக்களின் குழந்தைகள் சோதனைக்கூட எலிகளும் அல்லர். உயிர் காக்கும் மருத்துவர் பணியைவிட உயர்ந்த உயரிய உன்னத பணி ஆசிரியர் பணியாகும் என்பதை எல்லோரும் மனத்தில் இருத்திக் கொள்வது அவசியமாகும்.


இத்தகைய சூழலில் இதுபோன்ற தனிநபர் தன்னார்வ தற்காலிக ஆசிரியர் நியமன முன்னெடுப்புகளை தமிழக அரசு முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடில் விரும்பத்தகாத, மாநில கல்விக் கொள்கைக்கெதிரான சமூக விரோத, கேடு விளைவிக்கும் நாசகார கும்பல் அரசுப் பள்ளிகளில் ஊடுருவி கல்வி மற்றும் மாணவர் மனங்களில் நஞ்சை விதைக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வழியற்றுப் போகும். இதேநிலை அரசுப் பள்ளிகளில் தொடருமேயானால் நிரந்தர கூடாரத்திற்குள் புகுந்த தற்காலிக ஒட்டகம் கதையாகிவிடும் என்பதை ஆசிரியர்களும் ஆசிரியர் இயக்கங்களும் உணர்ந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். அரசுப் பள்ளிகள் நம் பள்ளிகள்; நம் பெருமை என்பதை அரசும் மனதார நினைக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படும் நிரந்தர காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர பணியிடங்களாகவே தொடர புதிய பணிநியமனங்கள் உருவாக்கப்படுதல் நல்லது. யார் யாரோ தத்தெடுக்க அரசுப் பள்ளிகள் யாருமற்ற அநாதைக் கூடங்கள் அல்ல. அவற்றிற்கு தமிழ்நாடு அரசு எனும் பெற்ற தாயுண்டு. பள்ளிக்கல்வித்துறை என்னும் பாதுகாப்பான வீடுமுண்டு. நினைவில் கொள்வீர்!

முனைவர் மணி கணேசன்

Share:

ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா.... ? குமுதம் வார இதழ்- Article

ஆசிரியர்களின் இதயம் என்ன இரும்பா.... ? குமுதம் வார இதழ்- Article



PDF Download

Share:

தமிழகத்தில் மரத்தடியில் பாடம் படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக 2,500 புதிய வகுப்பறை கட்டிடம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, இதற்காக இந்த ஆண்டு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது. பேராசிரியர் அன்பழகனார் அறக்கட்டளை சார்பில், முதற்கட்டமாக மரத்தடியில் பாடம் படிக்கும் மாணவர்களுக்காக 2,500 புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சியில் வன்முறைக்குள்ளான பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு துவங்கி உள்ளது. 


இதுதவிர 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, அருகே உள்ள பாலாஜி கல்லூரியில் நேரடி வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பள்ளி மாணவர்கள் 4 கிலோ மீட்டருக்குள் உள்ள எந்த பள்ளிகளிலும் சேரலாம். மாநில, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் செலவை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share:

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு படிவத்தை தவிர வேறு எந்த படிவமும் கையாள அறிவுறுத்தப்படவில்லை - CEOs meeting கருத்துப் பதிவில் SCERT Director அதிவுறுத்தல்.

பாடக்குறிப்பு படிவத்தைத் தவிர வேறு எந்தப் படிவத்தையும் எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கவோ பராமரிக்கவோ வலியுறுத்தவில்லை என்பதையும் வட்டாரக் கல்வி அலு லர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வலியுறுத்த வேண்டும்.



Share:

அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமிப்பது மிகவும் அவசியம் என்று சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.சதீஷ்குமார், 3 அரசு டாக்டர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மறு பிரேத பரிசோதனை முடிந்து, மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டுவிட்டது. அது வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை ஆவணங்கள் ஆய்வுக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட உள்ளன என்று கூறினார். பின்னர், இதுகுறித்து மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஒரு அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து அசன் முகமது ஜின்னா தனது வாதத்தில், டி.ஐ.ஜி. தலைமையில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவி மரணம் மற்றும் கலவரத்தின்போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் சேனல்கள், 31 டுவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகள் போலீஸ் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது மாணவியின் மரணம், பள்ளி வளாகத்தில் நடந்த கலவரம் ஆகிய இரு வழக்குகளையும் தனித்தனியாக போலீசார் விசாரிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் போலீசாரிடம் இல்லை. தமிழக அரசால் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த 27ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமையைச் சரிசெய்ய 2 வாரங்கள் ஆகும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நீதிபதி சதீஷ்குமார், இதே நிலை நீண்ட நாட்கள் தொடரக்கூடாது. விரைவில் பள்ளியை திறந்து வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிதுபடுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஊடகங்கள் ஏற்படுத்தக்கூடாது. இம்மாதிரியான சம்பவத்தை ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவது, அதைப் பார்க்கும் மற்ற மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மாணவர்களை படிக்கும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் அவர்களுக்கான சிறந்த வெளிப்புறச் சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும்’ என்று கூறினார்.  மேலும் போலீஸ் விசாரணைக்கு இடையூறாக உள்ள யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Share:

ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது

ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் - CEOs ஆய்வுக் கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது


Share:

பள்ளி சிறுவனை ஆசிரியை மசாஜ் செய்ய வைத்த வீடியோ ஒன்று வைரலானதால் நடவடிக்கை!

பள்ளி சிறுவனை  ஆசிரியை மசாஜ் செய்ய வைத்த வீடியோ ஒன்று வைரலானது. இதையடுத்து அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!

பள்ளி சிறுவனை  ஆசிரியை மசாஜ் செய்ய வைத்த வீடியோ ஒன்று வைரலானது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் போகரி வட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல் பட்டு வருகிறது. ஆரம்ப நிலை பள்ளிக்கூடமான இங்கு ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலானது. அதில் ஆசிரியைக்கு பள்ளி சிறுவன் ஒருவன் கையில் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ அதிகமானோரால் பார்க்கப்பட்ட நிலையில் ஆசிரியை மீது விமர்சனங்கள் குவிந்தன.

இதையடுத்து அரசு நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் கல்வித்துறை அதிகாரி சஞ்சீவ் குமார் விசாரணை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியையின் பெயர் ஊர்னிலா சிங் என தெரியவந்தது. இதேபோன்று மசாஜ் செய்தது தொடர்பாக இதே ஆசிரியை மீது மேலும் சில புகார்கள் முன்பு வந்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் ஊர்னிலா சிங் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீடியோ காட்சியில் ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் நிலையில், அவர்களை பணியாளர்களைப் போன்று ஆசிரியை பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Share:

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா - வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா 

வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா - வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் சார்பான கடிதம் நகல் , இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு போட்டிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்ற மாணவர்களின் விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Share:

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் தேதி அறிவிப்பு.


Share:

தமிழக பள்ளிகளில் இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழக பள்ளிகளில் இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழக பள்ளிகளில் இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழக பள்ளிகளில் இனி விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்த கூடாது – பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை விடப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்ல கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

பள்ளிகளுக்கு அறிவிப்பு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் எனவும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன் பின் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் ஜூன் மாதம் முதல் முழு நேரம் பள்ளிகள் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில் சில பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஒரு மாணவன் சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும் அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில்‌ மாணவர்கள்‌ சண்டையிட்டுக்‌ கொள்ளுதல்‌, சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம்‌ எதுவென்றாலும்‌ உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு

900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு

900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த சுமார் 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகள் அதிகரிப்பு, ஆங்கில வழிக் கல்வி மீதான ஈர்ப்பு காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து, மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 83 ஆயிரம் வரை வந்துவிட்டது. அதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல், தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர் இதன் காரணமாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2020-21 கல்வியாண்டில் ஒரு லட்சத்தை கடந்தது.

மாணவர்கள் எண்ணிக்கை

கடந்த 2010-11 கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 320 ஆக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்தஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரமாக மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

ஆசிரியர்கள் எண்ணிக்கை

இதற்கு ஏற்றவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

அது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் மாநகராட்சி பள்ளிகளில் தற்போது உள்ள மாணவர்களுக்கு ஏற்றவாறு எவ்வளவு ஆசிரியர்கள் தேவை என ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, 900 ஆசிரியர்கள் தேவை என்பது தெரியவந்தது.

இந்த ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பது எனவும், இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Ennum Eluthum Lesson plan 2022

Ennum Eluthum Lesson plan 


Share:

11th Tamil First Mid Term Question papers 2022-2023 - All district

11th Tamil First Mid Term Question papers 2022-2023 - All district

11th Tamil First Mid Term Question papers 2022-2023 - All district

  • 11th Tamil First Mid Term Model Question paper 2022-2023 - - Download Here
  • 11th Tamil First Mid Term Question paper 2022-2023- Download Here (Trichy)
Share:

05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு பொருந்தாது. 

இது செலவானில் முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் கிடையாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Share:

School Morning Prayer Activities 27-07-2022

School Morning Prayer Activities 27-07-2022


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.07.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் : 995

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு.

பொருள்:

விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.

பழமொழி :

A cursed cow has short horns.

இறைவன் ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறார்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம்.


 2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்


பொன்மொழி :

கல்வி என்பது ஒரு மூட்டை

நூல்களை வாசிப்பது அல்ல..

அடக்கம்.. ஒழுங்கு.. அறம்.. நீதி..

இவற்றின் முன்மாதிரி ஆகும்.

பொது அறிவு :

1.அறிவைக் குறிக்க வழங்கும் பட்சி எது ? 

ஆந்தை

2. திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும்? 

எட்டாயிரம் லிட்டர்.

English words & meanings :

felicitation - an expression of joy for the achievement of other persons. Noun. மற்றொருவரின் வெற்றியில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. பெயர்ச்சொல்

ஆரோக்ய வாழ்வு :

புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க கொத்தமல்லி உதவுகிறது

NMMS Q 33:

பற்களை வலிமையாக வைத்திருக்கப் பற்பசையில் பயன்படுத்தப்படும் வாயு எது? 

விடை: ஃபுளூரின்

ஜூலை 27 இன்று

அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாள்

ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.

கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார்.  2002 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.[

சாலிம் அலி அவர்களின் நினைவுநாள்

சாலிம் அலி (சலீம் அலி) (Sálim Ali; நவம்பர் 12, 1896 – சூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞரும் ஆவார். சாலிம் அலியின் முழுப்பெயர் சாலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும். இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் புரவலராக விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.

சாலிம் அலி பறவைகளின் நண்பராகவும், பாதுகாவலராகவும் விளங்கியதோடு மட்டுமின்றி, இயற்கைப் பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார்; பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்ற சூழியல் சார்ந்த கருத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

நீதிக்கதை

சோம்பேறிக் கழுதைக்கு கிடைத்த தண்டனை

ஒரு பண்ணையில் ஆண் கழுதையும், பெண் கழுதையும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை கடுமையாக உழைத்து பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலையில் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும். 

பெண் கழுதை எந்த வேலையும் பார்க்காமல் பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி விடும். இப்படியே வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது. 


ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்தது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது! என கிண்டல் செய்தது. என்ன செய்வது உழைத்தால் தான் முதலாளி விடுவார்! என்றது ஆண் கழுதை. இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது. 

ஏன் சிரிக்கிறாய்? 

அதற்கு பெண் கழுதை பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் போக மாட்டேன்!அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்! நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான் என அறிவுரை வழங்கியது பெண் கழுதை. 


காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் ஆனதும், பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். ஆனால், ஆண் கழுதை படுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்தது. பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழவில்லை. 

பண்ணையாள் முதலாளியிடம் சென்று, அய்யா! இந்த ஆண் கழுதை இன்று சண்டித்தனம் செய்கிறது! என்றான். சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ! என்றார். 


பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லை வைத்துவிட்டு பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக்கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டது என்று வருந்தியது பெண் கழுதை. 

நீதி :

சோம்பேறியாக இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள் - 27.07.22

◆தமிழகத்தில் 3 இடங்கள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களாக அறிவிப்பு.

◆செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வருவதையொட்டி, சென்னையில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

◆தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

◆அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் காட்டுத்தீ பரவியதால், குடியிருப்புகள் தீக்கிரையாகின.

◆இங்கிலாந்தில் உச்சமடையும் வெப்பம்... ஆறு, குளங்கள் வற்றும் அபாயம்: சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரிக்கை.

◆உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்வால்ட் பந்தயத்தில் சுவீடன் வீரர் அர்மன்ட் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

◆24 ஆண்டு கால கனவு பலிக்குமா! காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் முனைப்பில் களம்காணும் இந்திய ஹாக்கி அணி.

◆ஐ.எஸ்.எல் கால்பந்து : ஜிதேந்திர சிங்கை தக்க வைத்தது ஜாம்ஷெட்பூர் அணி.

Today's Headlines

 ◆Notification of 3 places in Tamil Nadu as Wetlands of International Importance.

 ◆A five-layer security arrangement has been made in Chennai with 22,000 police officers and inspectors ahead of Prime Minister Modi's visit to attend the opening ceremony of the Chess Olympiad.

 ◆No more Eucalyptus trees should be planted in Tamil Nadu: Madras High Court orders.

 ◆Wildfires are spreading uncontrollably in the state of Texas, USA.  As the forest fire spread to the residential areas, the residences were engulfed in flames.

 ◆Peak heat in the UK... Rivers, ponds at risk of drying up: Ministry of Environment warns.

◆Sweden's Armand sets a new record to win gold in the pole vault at the World Athletics Championships.

◆ Will the 24-year dream come true?  The Indian hockey team is aiming to win gold in the Commonwealth Games.

◆ ISL Football: Jamshedpur retains Jitendra Singh.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம்

காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல்.

Share:

அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு !

அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு !

அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு !


பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். 

சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.

  1. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
  2. மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தக்கூடாது.
  3. சத்துணவு தரமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
  4. பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் மாணவர்களுக்கு"வழங்கப்பட வேண்டும்.
  5. பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வந்துவிட வேண்டும்.
  6. ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. 
  7. மாணவர்களை ஆசிரியர்கள் தங்களது சொந்த வேலைக்காக பள்ளியை விட்டு வெளியே அனுப்பக் கூடாது. 
  8. ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-இல் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு !

மேலும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு  இதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 - பள்ளிக்கல்வித்துறை

Share:

TNPSC Group 4 Answer key 2022 - Pothu Tamil ( 24-07-2022 ) Today

TNPSC Group 4 Answer key 2022 - Pothu Tamil ( 24-07-2022 ) Today

  • TNPSC Group 4 Answer key 2022 - pdf download _( Question 1-29 )Pothu Tamil answer (24-07-2022)
  • TNPSC Group 4 Answer key 2022 - pdf download _( Question 1-100 )Pothu Tamil answer (24-07-2022)

TNPSC Group 4 Answer key 2022 - Pothu Tamil ( 24-07-2022 ) Today  

இந்த TNPSC Group 4 Answer key 2022 - Pothu Tamil ( 24-07-2022 ) Today   டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

ஜூலை 28 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை? July 28th Local Holiday for 4 District?

ஜூலை 28 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?

July 28th Local Holiday for 4 District? 

ஜூலை 28 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?

ஜூலை 28 - நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?

July 28th Local Holiday for 4 District? 



செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளான ஜூலை 28-ஆம் தேதி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க ஆலோசிக்கப்பட்டது.

 இதுதொடா்பான கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடா்பாக பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் விளக்கினா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, சா்வதேச வீரா்களின் வருகை குறித்த விவரங்கள், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்ட முன்னேற்பாட்டுப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா, நிறைவு விழா ஏற்பாடுகள் ஆகியவை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆய்வு செய்தாா். விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் பற்றிய விவரத்தை முதல்வரிடம் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு விளக்கினாா். 


நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்வுகள், மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் இடங்கள் தொடா்பான விவரங்கள், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் விளக்கினாா்.

உள்ளூா் விடுமுறை: 

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, சுற்றுலாத் துறை சாா்பில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் எடுத்துரைத்தாா். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நாளான, வருகிற 28-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Share:

பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். 

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 துணை தேர்வு வரும் 25ம் தேதி துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

Link open after 2. oclk PM

Hall ticket Direct Download Link - Click here



செய்முறை தேர்வுக்கான தேதி விபரத்தை, தனித் தேர்வர்கள், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, அறிந்து கொள்ள வேண்டும்.உரிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு இன்றி எந்த தேர்வரும், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

இணையதளத்தில் இன்று பிளஸ் 1 விடைத்தாள் நகல்

பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல், இன்று வழங்கப்பட உள்ளது.

இணையதளத்தில் இன்று பிளஸ் 1 விடைத்தாள் நகல்

அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 பொது தேர்வு விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு, இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இன்று மதியம், 12:00 மணி முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.விடைத்தாள் நகல் கிடைத்த பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், தேர்வுத் துறை இணையதளத்தில், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, இரு நகல்கள் எடுத்து, நாளை பகல், 12:00 மணி முதல் வரும், 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்; கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.

மறு கூட்டல்

மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடம், 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 205 ரூபாய் மற்றும் மறுமதிப்பீடு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 505 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

தமிழக அரசின் விடுதிகளில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை? – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழக அரசின் விடுதிகளில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கான சேர்க்கை? – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஆதி திராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் ஆதி திராவிடர் நல பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பாக 1324 தங்கும் விடுதிகள் இயங்கி வருகிறது. இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். பள்ளி விடுதிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பங்களை வரும் 20ஆம் தேதி வரையிலும், கல்லூரி விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதி திராவிடர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிக்கான மாணாக்கர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

4ம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் மாணவர்களில் கிறிஸ்தவ மாணவர்கள் 85% பிற்படுத்தப்பட்ட மாணவர் 10% பிற வகுப்பினர் 5% என்ற அடிப்படையில் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் விடுதியை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் வீடு பள்ளிக்கும் வீட்டிற்கும் 5 கீ. மீ தூரத்தில் இருக்க வேண்டும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாணவர்கள்தாங்கள் கல்வி பயிலும்‌ பள்ளி தலைமையாசிரியர்‌, கல்லூரி முதல்வரின்‌ சான்று இணைய வழியில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.

விண்ணப்பபதிவத்தில் பள்ளி மாணாக்கருக்கு EMIS எண்‌ மற்றும்‌ கல்லூரி மாணாக்கர்களுக்கு மத்தியமாநில அரசால்‌ கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இணையத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌ பதிவு எண்‌ இடம்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகள்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ கல்வி பயிலும்‌ மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்‌ .

பெற்றோரை இழந்த மாணவர்கள்‌ மற்றும்‌ தாய்‌ அல்லது தந்‌தை வெளியூர்களில்‌ பணிபுரிந்து பாதுகாவலர்‌ பொறுப்பில்‌ இருக்கும்‌ மாணவர்களுக்கும்‌ மேற்படி நிபந்தனை பொருந்தாது.

விடுதியில்‌ தங்கி கல்வி பயில தெரிவு செய்யப்படும்‌ மாணாக்கர்‌ மற்றும்‌ அவர்களின்‌ பெற்றோர்களிடம்‌ விடுதியில்‌ உள்ள பொருட்களை சேதப்படுத்தினாலோ அல்லது விடுதிக்‌ கட்டுப்பாட்டுகளை மீறி செயல்பட்டாலோ அவர்கள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

Share:

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் கூட்டல் பிழை? 76 மதிப்பெண் பெற்றவருக்கு 6 வழங்கி அலட்சியம்!

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் கூட்டல் பிழை? 76 மதிப்பெண் பெற்றவருக்கு 6 வழங்கி அலட்சியம்!

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் கூட்டல் பிழை? 76 மதிப்பெண் பெற்றவருக்கு 6 வழங்கி அலட்சியம்!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தத்தில், அதிக அளவுக்கு கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த கல்வி ஆண்டில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தப்பட்டன.

இதையடுத்து, விடைத்தாள் திருத்தமும் முடிக்கப்பட்டு, ஜூன் 20ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இந்த முறை பிளஸ் 2 தேர்வில், நன்றாக தயாராகி தேர்வு எழுதியும், சரியான மதிப்பெண் கிடைக்காததால், பல மாணவர்கள் சந்தேகம் அடைந்தனர். விடைத்தாள் நகல் கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.அவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் வழங்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.பலரின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டபோதும், மதிப்பெண்களை சரியான முறையில் கூட்டி பதிவிடாதது தெரியவந்துள்ளது.

கூட்டல் பிழை:

சில மாணவர்களுக்கு 70க்கும் மேல் மதிப்பெண்கள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. கூட்டல் பிழையால், பல மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண்கள் கூட பெற முடியாத அளவுக்கு, தேர்வு முடிவு வந்துள்ளது.ஒரு மாணவர் விடைத்தாளில் 76 மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அவருக்கு 6 மதிப்பெண் மட்டும், விடைத்தாள் முகப்பில் பதிவு செய்துள்ளது தெரியவந்து உள்ளது.அரசு தேர்வுத் துறை நடத்திய விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள இந்த கூட்டல் பிழை, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


மாணவர்கள் கலக்கம்:

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், தங்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு, மதிப்பெண் குறைந்திருக்குமோ என்றும் சந்தேகம் அடைந்துஉள்ளனர்.எனவே, கூட்டல் பிழை செய்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விடைத்தாளை ஆய்வு செய்யாத தலைமை திருத்துனர்கள், துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.மேலும், சந்தேகம் ஏற்பட்டுள்ள மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்க இன்னும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Share:

26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!



அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும்

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 26ஆம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு,அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் ,விடுமுறை அறிவிப்பு என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Share:

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் இதுவரை கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்!

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் இதுவரை கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி மற்றும் அடுத்த கட்ட EE பயிற்சி சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்!




Share:

School Morning Prayer Activities - 19.07.2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.07.2022



  திருக்குறள் :

குறள் எண் – 986

பால் – பொருட்பால்

இயல் – குடியியல்

அதிகாரம் – சான்றாண்மை

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்

.

விளக்கம்:

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

பழமொழி :

Tomorrow never comes

கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய் 

2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்

பொன்மொழி :

தன்னுடைய தைரியம், சுய மரியாதை, தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பவனுக்குத் தோல்வி என்ற ஒன்று இருக்க முடியாது.

-ஒரிசன் ஸ்வெட் மார்டென்

பொது அறிவு :

1.குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது? 

பிட்யூட்டரி

2.மூக்கில் பல் உள்ள விலங்கு எது? 

முதலை.

English words & meanings :

Yammer - one who talks foolishly and loudly. Noun. அர்த்தம் இல்லாமல் சத்தமாக பேசுபவர். பெயர்ச்சொல்

ஆரோக்ய வாழ்வு :

நார்ச்சத்து அதிகம் உள்ள சோயா சங்க் (மீல் மேக்கர்), நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதோடு பசியையும் கட்டுப்படுத்தச் செய்கிறது. இதனால் அடிக்கடி சாப்பிடும் ஆர்வம் குறையும்.

இதனால் மெட்டபாலிசத்தின் வேகமும் அதிகரித்து உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.

NMMS Q 27:

கோழிகளுக்கு பூஞ்சையினால் உருவாகும் நோய் எது? 


விடை: ஆஸ்பர்ஜில்லஸ்

நீதிக்கதை

ஆந்தை பெற்ற சாபம்

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லோரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது. 


நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள். 

ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால், காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவிற்கு வைத்தியம் பார்த்து குணமாகிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடிவந்துவிட்டனர். 


அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும்பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. 

அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம், என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை. 

நீதி :

பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.

இன்றைய செய்திகள் - 19.07.22

 🔼நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசகர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

🔼ஒகேனக்கல்லில் 3-வது நாளாக காவிரியில் 1.20 லட்சம் கனஅடியாக தொடரும் நீர்வரத்து: பயணிகளுக்கு தடை நீடிப்பு.

🔼தமிழகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.

🔼18 மாதங்களில் மக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: ஒப்பிட முடியாத வேகம் என பிரதமர் மோடி பெருமிதம்.

🔼நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

🔼மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

🔼உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்.

🔼மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி - சீர்காழி அணி வெற்றி.

Today's Headlines

🔼The Ministry of Health and Human Welfare launched the counseling of NEET candidates through mental health counselors.

🔼 Cauvery continues to flow at 1.20 lakh cubic feet for the 3rd day at Okanagan: Prohibition for travelers extended.

 🔼Polling for the Presidential election in Tamil Nadu is over.

🔼 200 crore doses of vaccine administered to people in 18 months: PM Modi boasts of unprecedented speed

🔼The Monsoon session of Parliament started yesterday.  The central government is planning to table 24 bills.

🔼 Iran has accused the US of trying again to create tension in the Middle East.

 🔼Shooting World Cup: Bronze Medal for India

 🔼State Level Beach Volleyball Tournament - Sirkazhi Team Wins.


 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

வெளியானது ஸ்ரீமதியின் கடைசி கடிதம்

வெளியானது ஸ்ரீமதியின் கடைசி கடிதம்

தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கி பயின்று வந்த விடுமுறை நாட்களில் பெற்றோரை சந்திக்க செல்வார். இந்நிலையில் ஜூலை 13 ம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில் பள்ளி விடுதி வளாகத்தில் மாணவி அடிப்பட்ட நிலையில் கண்ட விடுதி காவலர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மாணவி பள்ளி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி கடைசியாக எழுதிய கடிதம் ஒன்று தற்போது கிடைத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியும் வருகிறது. அந்த கடிதத்தில்,' நான் நல்லாதான் படிப்பேன். கெமிஸ்டிரில நிறைய ஈக்குவேஷனா இருக்கு. எனக்கு ஈக்குவேஷன படிக்கவே வராது. அதனால கெமிஸ்டிரி மிஸ் என்னைய ரொம்ப ப்ரஷர் பண்றாங்க.

ஒரு நாள் கெமிஸ்டிரி மிஸ் நான் படிக்கவே மாட்டிக்குறேன்னு மேக்ஸ் மிஸ்கிட்ட சொல்லிடாங்க. அவங்களும் என்ன ப்ரஷர் பண்றாங்க. ஹாஸ்டல்ல படிக்காம என்ன பண்றன்னு ரொம்ப திட்டிடாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் படிக்கவே மாட்டிக்குறேன்னு இவங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் போய் எல்லா மிஸ்கிட்டையும் ஒழுங்காவே படிக்கமாட்டிக்குறான்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு காலைல க்ளாஸ்க்கு வந்த ஸ்டாஃப் என்ன ஒழுங்காவே படிக்க மாட்டிக்குற விளையாட்டுதனமா இருக்கன்னு சொல்லிடாங்க. கெமிஸ்டரி மிஸ்ஸும், மேக்ஸ் மிஸ்ஸும் என்ன ரொம்ப ப்ரஷர் பண்றாங்க. மேக்ஸ் மிஸ் என்ன மட்டும் இல்ல எல்லாரையும் டார்ச்சர் பண்றாங்க.

சாந்தி மேடம் உங்களுக்கு ஒரு ரெக்யூஸ்ட் வைக்குறேன். நான் இந்த வருஷம் கட்டுண ஸ்கூல் பீஸ் மட்டும் எங்க அம்மாகிட்டையே திருப்பி கொடுத்துருங்க. புக் பீஸ், ஹாஸ்டல் பீஸ்ஸும் கொடுத்துருங்க. ஏன்னா நான் இங்க இருந்ததே கொஞ்ச நாள்தான். ப்ளிஸ் மேடம்".

" I Am sorry Amma I Am Sorry Appa, ETC..." என குறிப்பிட்டிருந்தார்.



Share:

NEET ( UG ) 2022 - Original Question Paper & Answer Key

NEET ( UG ) 2022 - Original Question Paper & Answer Key

17.07.2022 நடைபெற்ற நீட் இளநிலை தேர்வுக்கான வினா மற்றும் தற்காலிக விடைக் குறிப்பு.

NEET QP & KEY

NEET ( UG ) 2022 - Original Question Paper - Download here...

NEET ( UG ) 2022 -  Answer Key - Download here.


Share:

11th வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) Book PDF Download

11th வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) Book PDF Download 

TN 11th std வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) Book PDF Download Tamil medium & English Medium

பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு.



பார்வையில் காணும் அரசாணையின்படி 20222023ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் பாடநூல்களில் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் மட்டும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மறுசீரமைக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

1.அடிப்படை இயந்திரவியல் (Basic Mechanical Engineering)

2 .அடிப்படை மின்பொறியியல் (Basic Electrical Engineering)

3. அடிப்படை மின்னணு பொறியியல் (Basic Electronics Engineering)

4.நெசவியலும் ஆடை வடிவமைப்பும் (Textiles and Dress Designing)

5. செவிலியம் (Nursing)

6. வேளாண் அறிவியல் (Agricultural Sciences)

7. அலுவலக மேலாண்மையும் செயலியலும் மற்றும் தட்டச்சும் கணினி பயன்பாடுகளும் (Office Management and Secretaryship and Typography Computer Application)

8. தணிக்கையியல் (Auditing)

கீழ்கண்ட நான்கு பாடநூல்களுக்கு பழைய பாடநூல்களே அச்சிடப்பட்டுள்ளன. 

1.அடிப்படை கட்டடப் பொறியியல் (Basic Civil Engineering)

2. அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல் (Basic Automobile Engineering)

3. நெசவியலும் - அறிவியலும் (Textile Technology)

4. உணவக மேலாண்மை (Food Service Management)

மேலும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் மட்டும் உள்ள Computer Technology/ Computer Application பாடத்திற்கு மாற்றாக வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) என்ற புதிய"

பாடப்புத்தகம் 11 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கும் (Office Management and Secretaryship and Typography Computer Application அலுவலக மேலாண்மையும் செயலியலும் மற்றும் தட்டச்சும் கணினி பயன்பாடுகளும் நீங்கலாக) வழங்க அச்சிடப்பட்டுள்ளன.

மேற்கண்டவாறு மறுசீரமைக்கப்பட்ட -நூல்கள், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 பாடநூல்கள் மற்றும் வேலைவாய்ப்பு திறன்கள் என்ற பாடநூல் ஆகியவற்றினை சம்பந்தப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மண்டல அலுவலகத்திலிருந்து உடனடியாகப் பெற்று, 18.07.2022-க்குள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்துவிட்டு, அதன் விவரத்தினை பள்ளிக் கல்வி ஆணையரக "இ பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு (Dseesection@gmail.com) அனுப்பிவிட்டு, அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பத்துடன் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Share:

தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை அளித்தால் நடவடிக்கை- மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் எச்சரிக்கை

தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை அளித்தால் நடவடிக்கை- மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் எச்சரிக்கை!


விதிகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேசன் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கள்ளக்குறிச்சி கலவரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13- ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


 

இந்த நிலையில், சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (17/07/2022) காலை நடைபெற்ற மறியல் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. கல்வீச்சில் காவல்துறை உயரதிகாரிகள் உள்பட 16- க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர். சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்குள் நுழைந்து நிறுத்தப்பட்டிருந்த பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். 

 

ஒரு கட்டத்தில் வானத்தை நோக்கி காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கலவரக்காரர்களை எச்சரித்தனர். மேலும், காவல்துறையின் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அதிரடிப்படையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும், பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10- க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

இதனிடையே, கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

அந்த பகுதி முழுவதும் 1000- க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பள்ளிக்குள் சென்று நேரில் ஆய்வு செய்தனர். 

 

இந்த நிலையில், கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக, நாளை (18/07/2022) முதல் தமிழகத்தில் அனைத்து தனியார் மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படாது என்று தமிழ்நாடு மெட்ரிக்குலேசன், நர்சரி, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, மெட்ரிகுலேசன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தனியார் பள்ளிகள் இயங்காது என எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. முன் அனுமதி பெறாமல் விடுமுறை அளித்தால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

11th Tamil first Mid term Model Question paper 2022 -2023 | July unit test

11th Tamil first Mid term Model Question paper 2022 -2023 | July unit test 

முதல் இடைப் பருவ மாதிரி வினாத்தாள் - ஜூலை 

பதினொன்றாம் வகுப்பு

நேரம்:1.30 மணி

பொதுத்தமிழ்.              மதிப்பெண்கள்: 50

பலவுள் தெரிக:                  8x1-8

1) பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க

அ) முத்துலிங்கம் - யுகத்தில் பாடல் 

ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல்

இ) சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை

ஈ) இந்திரன் - பேச்சு மொழியும் கவிதை மொழியும்

i) அ, ஆ         ii) அ. ஈ      iii)ஆ. ஈ.        iv) அ. இ

2) "கபாடபுரங்களைக் காவுகொண்ட பின்னும் காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்"

அடி மோனையைத் தெரிவு செய்க.

அ) கபாடபுரங்களை - காவுகொண்ட 

ஆ) காலத்தால் கனிமங்கள்

இ)கபாடபுரங்களை - காலத்தால்

ஈ) காலத்தால் - சாகாத

3) பாயிரம் இல்லது_____அன்றே.

அ) காவியம்

(ஆ) பனுவல்

இ) பாடல்

ஈ) கவிதை

4) மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க, 

அ) அன்னம், கிண்ணம்

ஆ) டமாரம், இங்ஙனம் 

ஈ) றெக்கை, அங்ஙனம்

இ) ரூபாய், லட்சாதிபதி

5)பொருத்தமான இலக்கிய வடிவம் எது?

அ) ஏதிலிக் குருவிகள் - மரபுக்கவிதை

ஆ) திருமலை முருகன் பள்ளு - சிறுகதை,

இ)யானை டாக்டர் - குறும்பு தினம்

ஈ) ஐங்குறுநூறு- புதுக்கவிதை,

6) "வான் பொய்த்தது" - என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள்

அ) வானம் இடிந்தது.

ஆ)மழை பெய்யவில்லை

இ) மின்னல் வெட்டியது

ஈ) வானம் என்பது பொய்யானது.

7) கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை

அ) மதிப்புக்கூட்டுப் பொருள்கள் 

ஆ) நேரடிப் பொருள்கள்

i)அ-மட்டும் சரி

ii) ஆ-மட்டும் சரி

iii) இரண்டும் சரி

iv) அ-தவறு, ஆ-சரி

8) தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் 

அ) பரிதிமாற்கலைஞர்

ஆ) பண்டிதர்

இ) எச்.ஏ.கிருட்டிணனார்.

ஈ) பாரதிதாசன்

II. எவையேனும் ஐந்தனுக்கு மூன்று வரிகளில் விடையளி:                    5×2=10

9) பேச்சுமொழி,எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது. ஏன்? - பக்கம்

10) பாயிரம்' பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

11) உயிரெழுத்து பன்னிரண்டு, திருக்குறள், தீர்லடியார் - இச்சொற்களில்  எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன? 

12) அணிந்துரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக 

13) தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறுகுறிப்பு வரைக. 

14) ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள் யாது?

15) அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

 III. எவையேனும் நான்கனுக்கு குறுகிய வடிவில் விடையளி:            4×4=16

16) நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

17) 'என்னுயிர் தமிழ்மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக. 

18) மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிறகும் எடுத்துக்காட்டு தருக.

19) வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? - நும் கருத்தை எழுதுக. 

20) “சலச வாவியில் செங்கயல் பாயும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

21) ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக. 

22) ஏடு தொடக்கி வைத்து' எனத் தொடங்கும் யுகத்தின் பாடலை அடிபிறழாமல் எழுதுக.

1×4=4

V. எவையேனும் ஒன்றனுக்கு விரிவான விடையளி:                 1x6=6.

23) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும், எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.

(அல்லது)

24) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப்பாடல்வழி இயற்கை வளங்களை விவரிக்க.

VI. எவையேனும் ஒன்றனுக்கு விரிவான விடையளி:                    1×6=6

25) தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இனைக்கப்படுகிறது?

(அல்லது)

26) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக,

Share:

பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு.

பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் வெளியீடு.



பார்வையில் காணும் அரசாணையின்படி 20222023ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் வகையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பதினோராம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் உள்ள 12 பாடப்பிரிவுகளின் பாடநூல்களில் கீழ்க்கண்ட 8 பாடநூல்கள் மட்டும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மறுசீரமைக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

1.அடிப்படை இயந்திரவியல் (Basic Mechanical Engineering)

2 .அடிப்படை மின்பொறியியல் (Basic Electrical Engineering)

3. அடிப்படை மின்னணு பொறியியல் (Basic Electronics Engineering)

4.நெசவியலும் ஆடை வடிவமைப்பும் (Textiles and Dress Designing)

5. செவிலியம் (Nursing)

6. வேளாண் அறிவியல் (Agricultural Sciences)

7. அலுவலக மேலாண்மையும் செயலியலும் மற்றும் தட்டச்சும் கணினி பயன்பாடுகளும் (Office Management and Secretaryship and Typography Computer Application)

8. தணிக்கையியல் (Auditing)

கீழ்கண்ட நான்கு பாடநூல்களுக்கு பழைய பாடநூல்களே அச்சிடப்பட்டுள்ளன. 

1.அடிப்படை கட்டடப் பொறியியல் (Basic Civil Engineering)

2. அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல் (Basic Automobile Engineering)

3. நெசவியலும் - அறிவியலும் (Textile Technology)

4. உணவக மேலாண்மை (Food Service Management)

மேலும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் மட்டும் உள்ள Computer Technology/ Computer Application பாடத்திற்கு மாற்றாக வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) என்ற புதிய"

பாடப்புத்தகம் 11 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கும் (Office Management and Secretaryship and Typography Computer Application அலுவலக மேலாண்மையும் செயலியலும் மற்றும் தட்டச்சும் கணினி பயன்பாடுகளும் நீங்கலாக) வழங்க அச்சிடப்பட்டுள்ளன.

மேற்கண்டவாறு மறுசீரமைக்கப்பட்ட -நூல்கள், ஏற்கனவே நடைமுறையில் உள்ள 4 பாடநூல்கள் மற்றும் வேலைவாய்ப்பு திறன்கள் என்ற பாடநூல் ஆகியவற்றினை சம்பந்தப்பட்ட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மண்டல அலுவலகத்திலிருந்து உடனடியாகப் பெற்று, 18.07.2022-க்குள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்துவிட்டு, அதன் விவரத்தினை பள்ளிக் கல்வி ஆணையரக "இ பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு (Dseesection@gmail.com) அனுப்பிவிட்டு, அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்பத்துடன் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support