தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் ஆராய்ச்சி - முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு..!
வரலாறு, தமிழ், சமூக அறிவியல் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு ஆவண காப்பக ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆவண காப்பத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர்புடைய துறைகளில் உதவித்தொகையுடன்கூடிய ஓராண்டு ஆராய்ச்சிமேற்கொள்ள முதுகலை பட்டப்படிப்பு முடித்த கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆவண காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆய்வு செய்து, சமூகத்துக்கு பலனளிக்கும் வகையில் தங்கள் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், தமிழகத்தின் சமூகவரலாற்றை வெளிக் கொணரஉதவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
விண்ணப்பத்தின் விவரங்கள்மற்றும் விண்ணப்படிவம் ஆகியவற்றை ‘www.tnarchives.tn.gov.in’ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அலுவலகத்துக்கு வரும் ஜூன் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேர வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு ஆவண காப்பக ஆணையர்தெரிவித்துள்ளார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.