நாளை முதல் பள்ளி நேரங்களில் அதிரடி மாற்றம் அமல் – கல்வித்துறை உத்தரவு!

நாளை முதல் பள்ளி நேரங்களில் அதிரடி மாற்றம் அமல் – கல்வித்துறை உத்தரவு!



வடமாநிலங்களில் நிலவி வரும் அதிகபட்ச பனிமூட்டங்களின் காரணமாக பள்ளிகளுக்கு புதிய உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி நேரங்கள்:

வட மாநிலங்களில் தற்போதைய காலநிலையில் அதிக அளவிலான பனி மூட்டங்கள் நிலவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருவதால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி டிசம்பர் 4ம் தேதி திங்கட்கிழமை முதல் டிசம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமைவரை பள்ளிகளுக்கான வேலை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அட்டவணையின் படி காலை 9:30க்கு பள்ளிகள் தொடங்கி மாலை 3:30க்கு முடிவடையும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப் அரசு சமீபத்தில் மாநிலத்தில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அரசின் நடவடிக்கையின் காரணமாக முன்னதாக 3500 அரசு பள்ளிகளில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை இருந்து வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 600க்கும் கீழாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்


Post a Comment

0 Comments