தனியார் நிறுவனங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் கொடுங்க.. தமிழக அரசு அட்வைஸ்!
மிக்ஜாம் புயல் காரணமாக, வட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை விடுக்கப்பட்டிருந்தது.
4 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை
இந்த நிலையில், கனமழை தொடரும் என்பதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்துக”
இதனிடையே, நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பணியாளர்களை முடிந்தவரை வீட்டில் இருந்து பணியாற்ற தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசியமாக தேவைப்படும் பணியாளர்களை மட்டும் வரவழைத்து நிறுவனங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.