ஹாப்பி நியூஸ்! டிச.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு டிச.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை:
மகாவிஷ்ணுவின் 108 வைணவத் தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏகப்பட்ட திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருவதுண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 12ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
மேலும், டிசம்பர் 23ஆம் தேதி சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக ஏகப்பட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி வைகுண்ட ஏகாதசி திருவிழாவை ஒட்டி திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் டிசம்பர் 23ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு கட்டும் விதமாக மற்றொரு சனிக்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக இருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.