மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் அவதி – பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு!!

மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் அவதி – பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு!!சென்னை நகரை மிக்ஜாம் புயல் தாக்கி வரும் நிலையில் சென்னையில் பெட்ரோல், டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புயல்:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. அந்த வகையில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பெட்ரோல், டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் தற்போது அண்ணாசாலை மற்றும் கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, சென்னையில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இதில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் வேறு பகுதிகளுக்கு சென்று பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இதனால், பெட்ரோல், டீசல் கிடைக்கும் பங்க்களில் பொதுமக்கள் பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்கி செல்கின்றனர்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...