தீவிரமடையும் புயல்.. விடாமல் தொடரும் கனமழை – டிச. 4 & 5 கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
தீவிரமடையும் புயல்:
வங்க கடலில் உருவாகியுள்ள தீவிர காற்று மண்டலம் ஆந்திராவில் நாளை காலை புயலாக மாற உள்ளது. ஆந்திராவில் புயலுக்கு மாநில முதல்வர் மைங்சாங் புயல் என்று பெயரிட்டுள்ளார். இதன் காரணமாக ஆந்திராவின் நெல்லூர், பிரகாசம், ரயிலசீமா போன்ற மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கன மழையானது நான்கு நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் உஷார் படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பிரகாசம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் டிசம்பர் 4 மற்றும் 5 (திங்கள் மற்றும் செவ்வாய் ) இரண்டு தினங்கள் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது
புயல் கரையை கடக்கும்போது 105 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக் கூடும் என்பதால் அனைத்து அரசு துறைகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் நிவாரண பணிகளில் எந்தவித தடைகளும் இல்லாமல் அனைத்து அரசு அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் நிவாரண முகாம்களில் குடிநீர், உணவு, பால் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.