நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை வாபஸ் – திடீர் உத்தரவு!

நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை வாபஸ் – திடீர் உத்தரவு!


பள்ளிக்கல்வித்துறையானது முன்னதாக டிசம்பர் 5ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விடுமுறை வாபஸ்:

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் முதல் நவ கேரளா சதஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கேரள முதல்வர் அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல்வருடன் அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு தொகுதி வாரியாக முதல்வர் வரும்போதும் அப்பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி அன்று திருச்சூர் மாவட்டத்தில் நவ கேரளா சதஸ் நிகழ்ச்சி காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண சிரமங்களை கருத்தில் கொண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மாநில பள்ளிகள் பாராளுமன்றம் நடைபெறுவதால் டிசம்பர் 5ஆம் தேதி பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை தற்போது வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...