சென்னைக்கு எவ்வளவு பக்கத்தில் மிக்ஜாம் புயல் வரும்? - புது அப்டேட் இதோ!
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை தென்மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு, 5 ஆம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் குறித்து வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வடக்கு, வடமேற்கு திசையில் மிக்ஜாம் புயல் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. மிக்ஜாம் புயலின் வேகம் 11 கிலோ மீட்டரில் இருந்து 8 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே 150 கிலோ மீட்டர் முதல் 175 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரலாம்” என வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.