மிக்ஜாம் புயலின் கண் கடந்தும்.. சென்னையில் இன்னும் மழை விடாதது ஏன்?

 மிக்ஜாம் புயலின் கண் கடந்தும்.. சென்னையில் இன்னும் மழை விடாதது ஏன்?

சென்னைக்கு அருகே மிக்ஜாம் புயல் வந்துவிட்டு கடந்து சென்ற பின்பும் கூட இன்னும் மழை நிற்கவில்லை. இப்படி மழை நிற்காமல் போனதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் மிக்ஜாம் புயல் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது மிக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. தற்போது தீவிர புயலாக இது உள்ளது.

இன்று பிற்பகல் இது அதி தீவிர புயலாக உருவெடுக்கும். அதி தீவிரமாக வலிமை அடைந்து மேலும் தீவிரம் அடையும். கடந்த 6 மணி நேரத்தில் சென்னைக்கு கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இது தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து செல்லும்

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இரவு வரை மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக கனமழை காற்றோடு பெய்யும். மக்கள் வெளியே செல்ல கூடாது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கண் அருகே வந்தது; மிக்ஜாங் புயல் தொடக்கத்தில் இருந்தே கணிக்க முடியாமல் உள்ளது. இந்த புயல் சென்னைக்கு அருகே 50 கிமீ தூரம் வரை வந்தது.

தற்போது அந்த புயல் லேசாக ரூட்டை மாற்றி உள்ளது. நேற்று இரவு அந்த புயல் வட வடமேற்கு திசையில் சென்றது. அதாவது தொடக்கத்தில் சரியாக கணிக்கப்பட்ட பாதையில் சென்றது. நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே செல்லும் வகையில் நகர்ந்தது.ஆனால் இப்போது வடமேற்கு திசையில் செல்ல தொடங்கி உள்ளது. அதாவது கொஞ்சம் சென்னைக்கு அருகே நகர தொடங்கி உள்ளது.

ஆனால் புயலின் கண் ஏற்கனவே சென்னைக்கு அருகே வந்துவிட்டு சென்றுவிட்டது. சென்னைக்கு அருகே மிக்ஜாம் புயல் வந்துவிட்டு கடந்து சென்ற பின்பும் கூட இன்னும் மழை நிற்கவில்லை. இப்படி மழை நிற்காமல் போனதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ரீ சைக்கிள் எபெக்ட்: இதற்கு காரணம்.. ரீ சைக்கிள் எபெக்ட் என்று கூறப்படுகிறது. அதாவது புயலின் முன் பக்கம், நடுபக்கம் .. அதாவது கண் கடந்துவிட்டாலும் கூட.. புயலின் பின் பகுதி இன்னமும் சென்னைக்கு 110 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...