தமிழகத்தில் கல்லூரிகளுக்கு டிச.11 வரை விடுமுறை – மிக்ஜாம் புயல் எதிரொலி!

 தமிழகத்தில் கல்லூரிகளுக்கு டிச.11 வரை விடுமுறை – மிக்ஜாம் புயல் எதிரொலி!


தமிழகத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக கல்லூரிகளுக்கு டிச.11ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த குறுஞ்செய்தி மாணவர்களின் பெற்றோர்கள் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தை நேற்று முன்தினம் மிக்ஜாம் புயல் தாக்கியது . இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதனால் இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 4 ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இந்த 4 மாவட்டங்களில் உள்ள பல்வேறு தனியார் கலை அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரியிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.


அதனால் இந்த கல்லூரிகளுக்கு வருகிற டிச. 10 ஆம் தேதி வர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளுக்கு டிச.11 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் கல்லூரிகளின் விடுதிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விடுமுறை குறித்த அறிவிப்பை கல்லூரி நிர்வாகங்கள் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பல கல்லூரிகள் நிவாரண முகாமாக இயங்கி வருவதால் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...