தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 பொங்கல் பரிசு – அரசின் திட்டம் என்ன?

தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 பொங்கல் பரிசு – அரசின் திட்டம் என்ன?


தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது குறித்து வீட்டு வசதி துறை அமைச்சர முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் உதவியாக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு அல்லது ரொக்கப் பணத்தை வழங்கி வருவது வழக்கம். தற்போது மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருவதால் பொங்கல் பரிசு குறித்த அரசின் திட்டம் ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்நிலையில் வீட்டு வசதி துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவை, தமிழகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பயனாளிகளின் ஆண்டு குடும்ப வருமானம் ரூபாய் 1.20 லட்சம் என்பதை உயர்த்துவதற்கான கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முதல்வர் கோவைக்கு வரும்போது அரசு கட்டடங்கள் எவை தயார் நிலையில் உள்ளதோ அவற்றை மட்டுமே திறந்து வைப்பார். தைப்பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுமா அல்லது ரூபாய் 2000 ரொக்க பணம் வழங்கப்படுமா என்பதை முதல்வர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் பொங்கல் பரிசுக்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments